ETV Bharat / state

திருக்காட்டுப்பள்ளியில் கோயிலுக்குச் சென்ற மூதாட்டி சடலமாக மீட்பு!

author img

By

Published : Dec 17, 2020, 9:49 AM IST

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே கோயிலுக்குச் சென்ற மூதாட்டி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருக்காட்டுப்பள்ளியில் மூதாட்டி சடலமாக மீட்பு  Recovery of the body of an elderly woman at Thirukattupalli  elderly woman dead body recovered in thanjavur  Thanjavur Crime News  Thanjavur District News  Tamilnadu Crime News  தஞ்சாவூர் மாவட்ட குற்றச் செய்திகள்  தஞ்சாவூர் மாவட்டசெய்திகள்  தமிழ்நாடு குற்றச் செய்திகள்
elderly woman dead body recovered in thanjavur

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்த வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மகமு அம்மாள் (65). இவர் நேற்று காலை (டிச. 16) கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால், மாலை வரை அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

சடலமாக மீட்பு

இந்நிலையில், பவனமங்கலம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்து கிடப்பதாக மகமு அம்மாள் மகன் பாலமுருகனுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில், பாலமுருகன் அங்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடப்பது தாய் மகமு அம்மாள் என்பது தெரியவந்தது.

விசாரணை

பின்னர் இது குறித்து திருக்காட்டுப்பள்ளி நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.