ETV Bharat / state

குறுவை பாய் நாற்றங்கால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

author img

By

Published : Jun 7, 2021, 6:02 PM IST

இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன்.07) நடைபெற்றது.

வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், குறுவை சாகுபடி குறித்து தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகள், அலுவலர்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

அதன்பின்பு அமைச்சர், தஞ்சாவூர், களிமேடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுவை பாய் நாற்றங்கால் தயார் செய்யக்கூடிய பணிகளை பார்வையிட்டார். அப்போது விவசாயிகளிடம் விலை நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர், “டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி 3.50 லட்சமாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது ஒரு லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி ஒரு லட்சத்து ஐந்தாயிரமாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 46 ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விதை நெல், உரம் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது. அதேசமயம் தூர்வாரும் பணிகள் 30 விழுக்காடு நிறைவடைந்துவிட்ட நிலையில், தண்ணீர் வருவதற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவு பெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'எனக்கு அமைச்சர் சேகர் பாபுவை தெரியும், வரச்சொல்லவா?' - பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.