ETV Bharat / state

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை தேரோட்டம்!

author img

By

Published : Apr 19, 2019, 10:59 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை தேரோட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது போற்றக்கூடியது சாரங்கபாணி திருக்கோயில். இது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருக்கோவிலில் மூர்த்தி தலம் தீர்த்தம் மற்றும் திருத்தேர் திருவாபுராணம் ஆகிய அனைத்துமே பாடல் பெற்ற விளங்குவது வரலாற்றுச் சிறப்புடையது.

இத்திருத்தலத்தில் இருகரத்துடன் எழந்தருளியுள்ள மூலவர் ஸ்ரீ ஆராவமுதனை ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் என்றும் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் உற்சவரை நாற்றோளெந்தாய் என்றும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தமையால் இத்திருத்தலம் உபயபிரதான திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது.

சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான இன்று பெரிய திருதேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் சாரங்கராஜா ஸ்ரீதேவி பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் ஏப் 19


கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவதாக போற்றக்கூடிய சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் 
கும்பகோணத்தில்108 திவ்ய தேசங்களில் மூன்றாவது போற்றக்கூடிய சாரங்கபாணி திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இத்திருக்கோவிலில் மூர்த்தி தலம் தீர்த்தம் மற்றும் திருத்தேர் திருவாபுராணம் ஆகிய அனைத்துமே பாடல் பெற்ற விளங்குவது வரலாற்றுச் சிறப்புடையது இத்திருத்தலத்தில் இருகரத்துடன் எழந்தருளியுள்ள மூலவர் ஸ்ரீ ஆராவமுதனை ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் என்றும் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் உற்சவரை நாற்றோளெந்தாய் என்றும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தமையால் இத்திருத்தலம் உபயப்ரதான திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது இத்திருத்தலத்தில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு 11.04.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தினமும் காலை மாலையில் சார்ங்கராஜா ஸ்ரீதேவி பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா காட்சி முதல் நாள் தங்கஇந்திர விமானத்திலும் இரண்டாம் நாள் வெள்ளி சூரியபிரபையில் மூன்றாம் நாள் வெள்ளி சேஷவாகனம் நான்காம் நாள் ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளி தங்ககருட வாகனம் ஐந்தாம் நாள் வெள்ளி அனுமந்தவாகனம் ஆறாம் நாள் வெள்ளியானைவாகனம் ஏழாம் நாள் பின்னைமர வாகனம் எட்டாம் நாள் தங்ககுதிரைவாகனம் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று ஒன்பதாம் நாள் பெரிய திருதேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் சாரங்கராஜா ஸ்ரீதேவி பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை பத்தாம் நாள் ஸப்தாவர்ணம் 81 கலச ஸ்தாபனம் திருமஞ்சனம் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் உதவி ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.