ETV Bharat / state

ராஜராஜ சோழன் 1034ஆவது சதய விழா: நவம்பர் 5ஆம் தேதி கொடியேற்றம்!

author img

By

Published : Oct 17, 2019, 11:24 PM IST

தஞ்சாவூர்: ராஜராஜ சோழன் 1034ஆவது சதய விழா நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன் அரியணை ஏரிய நாளான சதயவிழா ஒவ்வொரு வருடமும் விமர்சையாகக் கொண்டாடப்படும். இந்தாண்டு ராஜராஜ சோழன் 1034ஆவது சதய விழா, வருகின்ற நவம்பர் ஐந்தாம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

அதில், சதய விழாவுக்காக தற்காலிக சுற்றுலாத் தகவல் மையம் அமைத்தல், கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கவியரங்கம், மத்திய தொல்பொருள் துறை முதுநிலைப் பாதுகாப்பு அலுவலர் விழாவிற்கு பந்தல் அமைப்பது, மின் அலங்காரம் செய்வது ஆகியவை குறித்து பேசப்பட்டது. மேலும் கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் சதய விழாவினை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் கலைநிகழ்ச்சி தொய்வில்லாமல் நடத்திட ஏற்பாடு செய்தல் வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கூறினார் .

இராஜராஜ சோழன் 1034-வது சதய விழா தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

சதய விழா நடைபெறும் இரண்டு நாட்களிலும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் இருக்கவும் திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்கலாமே: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

Intro:தஞ்சாவூர் அக் 16


மாமன்னன் இராஜராஜ சோழன் 1034-வது சதய விழா தொடர்பான
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, தலைமையில் நடைபெற்றது.


.Body:தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாமன்னன் இராஜராஜ சோழன் 1034-வது சதய விழா தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது

ஆண்டுதோறும் நடபெறும் சதயவிழா இந்தாண்டு
மாமன்னன் இராஜராஜ சோழன் 1034-வது சதய விழா வருகின்ற 05.11.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது.

சதய விழா தொடர்பான தற்காலிக சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வெளியீடுகளை விநியோகம் செய்ய வேண்டும். மாமன்னன் இராஜராஜ சோழன் வரலாறு தொடர்பாக தொல்லியல் துறையின் மூலம் வெளியிப்பட்ட புத்தகங்களை மாவட்ட சுற்றுலா அலுவலர் தலைமையில் விநியோகம் செய்ய வேண்டும்.

தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் அவர்கள் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கவியரங்கம் முதலிய கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.

மத்திய தொல்பொருள் துறை முதுநிலை பாதுகாப்பு அலுவலர் விழாவிற்கு பந்தல் அமைப்பது, மின் அலங்காரம் செய்துவது,

கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் அவர்கள் சதய விழாவினை முன்னிட்டு 05.11.2019 மற்றும் 06.11.2019 ஆகிய இரண்டு நாள்களுக்கு நடைபெறும் கலைநிகழ்ச்சி தொய்வில்லாமல் நடத்திட ஏற்பாடு செய்தல் வேண்டும்.

சத்திர நிர்வாகம் தனி வட்டாட்சியர் அவர்கள் சதய விழாவில் பங்கேற்கும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மாணவ மாணவியர் இடையே இராசராச சோழனின் சிறப்புகளை பற்றிய பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) அவர்கள் சதய விழா நடைபெறும் 05.11.2019 மற்றும் 06.11.2019 ஆகிய இரண்டு நாட்களிலும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ குழுவினரை தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அவர்கள் சதய விழா நடைபெறும் 05.11.2019 மற்றும் 06.11.2019 ஆகிய இரண்டு நாட்களிலும் சுகாதாரப் பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்து தூய்மையாக வைத்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் அவர்கள் சதய விழா நடைபெறும் 05.11.2019 மற்றும் 06.11.2019 ஆகிய நாட்களில் திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் அவர்கள் சதய விழா நடைபெறும் 05.11.2019 மற்றும் 06.11.2019 ஆகிய இரு நாட்களிலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருடன் தயார் நிலையில் கோயில் வளாகத்தில் நிறுத்தி வைத்திட வேண்டும்.

மாவட்ட காவல் துறையினர் சதய விழாவினை முன்னிட்டு இரண்டு நாள்கள் பொது மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும். கூடுதலான காவலர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும். கண்காணிப்பு கேமிரா பொறுத்திட வேண்டும். சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் அவர்கள் பெரிய கோவிலின் சுற்றுப்புறத்தில் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், பக்தர்களுக்கு குடிநீர் தொட்டி அமைத்தல், நகர மைய பகுதிகளில் மின் அலங்கார விளக்குகள் அமைக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்கள் விழா தொடர்பான அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அனைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.

         இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, அரண்மனை தேவதஸ்தானம் உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.