ETV Bharat / state

பொது இடத்தில் கிடக்கும் பழுதான மின்கம்பத்தால் அடிக்கடி விபத்து!

author img

By

Published : Dec 7, 2019, 10:58 AM IST

தஞ்சை: பொது இடத்தில் கிடக்கும் பழுதான மின்கம்பத்தை அகற்றக்கோரி மின்சார வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Frequent accidents due to a defective electricity pole in the public space
பொது இடத்தில் கிடக்கும் பழுதான மின்கம்பத்தால் அடிக்கடி விபத்து

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள திருச்சிற்றம்பலம் பகுதி, வணிக ரீதியான சிறிய நகர் பகுதியாகும். சுற்றியுள்ள கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திருச்சிற்றம்பலம் தான் வணிக மையமாக விளங்குகிறது.

இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், காவல் நிலையம், வங்கிகள், பிரசித்தி பெற்ற ஆலயங்கள் ஆகியன உள்ளன. இந்நிலையில் காவல் நிலையம் மற்றும் பட்டுக்கோட்டை செல்லும் பிரிவு பகுதியில் உள்ள இரும்பாலான மின் கம்பம் பழுதடைந்தது.

இதையடுத்து மின்வாரியம் அந்த பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தை அமைத்தனர். ஆனால் பழுதடைந்த மின் கம்பத்தை சாலையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இந்த இடத்திற்கு அருகில்தான் மருந்து கடை மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் உள்ளதால் இந்த பகுதிக்கு மக்கள் அனைவரும் அதிக அளவில் வருகின்றனர்.

இந்நிலையில், இரவு நேரங்களில் இப்பகுதிக்கு வரும் மக்கள், கீழே கிடக்கும் மின் கம்பத்தை கவனிக்காமல் தடுக்கி விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

பழுதான மின்கம்பத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

இதுபோல், கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இந்த பழுதடைந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மின்சார வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:பொது இடத்தில் கிடக்கும் பழுதான மின்கம்பத்தால் அடிக்கடி விபத்து


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள திருச்சிற்றம்பலம் .இது வணிக ரீதியான சிறிய நகர் பகுதியாகும். திருச்சிற்றம்பலத்தை சுற்றியுள்ள கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திருச்சிற்றம்பலம் தான் வணிக மையமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், காவல் நிலையம் ,வங்கிகள், பிரசித்தி பெற்ற ஆலயங்கள் ஆகியன உள்ளன. இந்நிலையில் காவல் நிலையம் மற்றும் பட்டுக்கோட்டை செல்லும் பிரிவு பகுதியில் உள்ள இரும்பாலான மின் கம்பம் பழுதடைந்தது. இதையடுத்து மின்வாரியம் அந்த பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தை அமைத்தனர். ஆனால் பழுதடைந்த மின் கம்பத்தை சாலையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இந்த இடத்திற்கு அருகில்தான் மருந்து கடை மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் உள்ளன என்பதனால் மக்கள் அனைவரும் அதிக அளவில் இந்த பகுதிக்கு வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த பகுதிக்கு வரும் போது கீழே கிடக்கும் மின் கம்பம் இருளில் தெரியாத நிலையில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள். மற்றும் நடந்து செல்பவர்கள் மின்கம்பத்தில் விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதுபோல கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே இந்த பழுதடைந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மின்சார வாரிய அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.