ETV Bharat / state

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

author img

By

Published : Dec 9, 2019, 3:29 PM IST

தஞ்சை: வயலில் உரம் இடுவதற்கு சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

shock
shock

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நயினாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் நேற்று மாலை தனக்குச் சொந்தமான வயலில் உரம் இடுவதற்காகச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் கருப்பையா வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை வயலில் இறங்கி தேடியபோது, வயலுக்குள் இறங்கிய உறவினர் ஒருவருக்கு திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் அங்கிருந்து உடனே வெளியேறினார்.

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

பின் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தை பார்வையிட்டபோது, மின்கம்பத்தின் மேலே உள்ள மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மின் ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் வயலின் உள்ளே இறங்கி தேடியபோது மின்சரம் தாக்கி கருப்பையா இறந்து கிடந்தார்.

பின் இதுகுறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் கருப்பையாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:மின்சாரம் தாக்கி விவசாயி பலி


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள முதல்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி நயினாங்குளம் . இந்த பகுதியை சேர்ந்தவர் கருப்பையா வயது 45. இவர் நேற்று மாலை தனக்குச் சொந்தமான மகாராஜா சமுத்திரம் பகுதியிலுள்ள உள்ள வயலில் உரம் இடுவதற்காக சென்றுள்ளார் இந்நிலையில் இரவு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரவு முழுதும் தேடியும் அவரை காணவில்லை.இதை அடுத்து இன்று காலை அவர் சென்ற வயல் பகுதியில் தேட ஆரம்பித்தனர். நெற்பயிர்கள் இரண்டு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள நிலையில் வயலின் உள்ளே தேடலாம் என்று எண்ணி அவரது உறவினர் ஒருவர் வயலுக்குள் இறங்கியுள்ளார். இதையடுத்து திடீரென மின்சாரம் தாக்கியதில் கருப்பையாவின் உறவினர் உடனடியாக வயலை விட்டு வெளியேறினார்.இதுபற்றி அங்கிருந்த வர்களிடம் தெரிவித்துள்ளார்.பின்னர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது மின்கம்பத்தின் மேலே உள்ள மின் கம்பி அறுந்து கிடந்தது தெரிந்தது .இதையடுத்து உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மின் ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் வயலின் உள்ளே இறங்கி பார்த்தபொழுது கருப்பையா உடல் தலைகுப்புற கிடந்தது இவர் உடல் அருகே உரம் வைத்திருந்த பாத்திரம் கிடந்தது அதன் அருகில் அறுந்து விழுந்த மின் கம்பி இருந்தது. இதையடுத்து உடனடியாக பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் அறுந்த மின் கம்பியை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.