ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது மோசடி புகார்

author img

By

Published : Dec 22, 2021, 10:39 AM IST

Updated : Dec 22, 2021, 10:59 AM IST

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி வேலை வாங்கித் தருவதாக 30 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக, அதிமுக முன்னாள் நிர்வாகி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

thanjavur latest news  முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது மோசடி புகார்  தங்கமணி மகன் தரணிதரனிடம் 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்  Ex Minister thangamani  another complaint against Ex Minister thangamani  அதிமுக நிர்வாகி பக்கிரிசாமி புகார் அளித்துள்ளார்
முன்னாள் அமைச்சர் தங்கமணி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் அதிமுகவில் பல பொறுப்புகளை வகித்துவந்துள்ளார். தற்போது தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராகவும் இருந்துவருகிறார். பக்கிரிசாமி நேற்று (டிசம்பர் 21) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், மதுரையில் வட்டாட்சியராக இருக்கக்கூடிய தனது நண்பர் தனலட்சுமி என்பவர் தன்னை அணுகி, அவரது மகன் பாஸ்கருக்கு மின்சாரத் துறையில் உதவிப் பொறியாளர் பணி வாங்கித் தருமாறு கூறியதாகவும், அதனால் தனது நண்பர் நாமக்கல் எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி என்பவர் மூலமாக அப்போதைய மின்சாரத் துறை அமைச்சராக இருந்த தங்கமணியிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

உதவிப் பொறியாளர் பணிக்கு 30 லட்சம்?

அப்போது தங்கமணி 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பணி நியமன ஆணையை வாங்கிக் கொள்ளுமாறு தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். இதனை அடுத்து ஒரு வாரத்தில் பணத்தைத் தயார் செய்து தங்கமணியின் வீட்டில் அவரது மகன் தரணிதரனிடம் 30 லட்சம் ரூபாயைக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் பல மாதங்களாக வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பி கொடுக்காமலும் தங்கமணி ஏமாற்றிவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை ஏமாற்றிய தங்கமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மறைவு: ஸ்டாலின் அஞ்சலி

Last Updated : Dec 22, 2021, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.