ETV Bharat / state

நீர்நிலைகளை சுத்தம் செய்ய முன்வந்த கல்லூரி மாணவர்கள்

author img

By

Published : Nov 19, 2019, 9:42 AM IST

தஞ்சாவூர்: நீர்நிலைகளை சுத்தம் செய்ய கல்லூரி மாணவர்கள் முன்வந்ததையடுத்து சமூகப் பணியில் உள்ளூர் இளைஞர்கள் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.

college students and local youths joints social work

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது பண்ணவயல் ஊராட்சி. இந்தக் கிராமத்தில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. தற்போது காவிரி நீர் கடைமடை பகுதிகளை அடைந்ததாலும் இப்பகுதிகளில் தொடர் மழை பெய்துவந்ததாலும் ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இருந்தும் இந்த ஏரி, குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்துவருகிறது. இதில் உள்ள ஆகாயத்தாமரை, குப்பைகள் தண்ணீரை மாசுபடுத்துவதால் அந்தத் தண்ணீரை மக்கள் உபயோகப்படுத்த முடியாமல் இருக்கிறது.

இதனையடுத்து தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரி மாணவர்கள் இங்கு உள்ள குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை, குப்பைகளை அகற்றி ஏரி, குளங்களை தூய்மைப்படுத்துவது என முடிவுசெய்தனர். முதல்கட்டமாக பண்ணவயல் கிராமத்திலுள்ள வண்ணான் குளத்தை சுத்தம் செய்ய அவர்கள் களமிறங்கினர்.

கடந்த ஒருவார காலமாக இந்த முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை கண்டு அந்த ஊர் இளைஞர்கள் தாங்களாக முன்வந்து இந்த சமூகப் பணியில் தங்களையும் இணைத்துக்கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

நீர்நிலைகளை சுத்தம் செய்த தஞ்சை மாணவர்கள்

இதற்காக கயிறு, காற்றடைக்கப்பட்ட டியூப் ஆகியவற்றை பயன்படுத்தி மிக நேர்த்தியாக குளத்திலுள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்திவருகின்றனர். இவர்கள் முதற்கட்டமாக இந்தக் குளத்தை சுத்தம் செய்து முடித்தபின் அடுத்தடுத்த குளங்களை கல்லூரி விடுமுறை நாள்களில இந்தப் பணியை தொடரப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் பட்டுக்கோட்டை அழகிரி மணிமண்டபம்..!

Intro:நீர் நிலைகளை சுத்தம் செய்ய முன் வந்த கல்லூரி மாணவர்கள்-சமூக பணியில் தங்களையும் இணைத்து கொண்ட உள்ளூர் இளைஞர்கள்


Body:தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள பண்ணவயல் ஊராட்சி. இந்த கிராமத்தில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. தற்போது காவிரி நீர் கடைமடை பகுதிகளை அடைந்த நிலையிலும் மேலும் இப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்ததாலும் இப்பகுதியிலுள்ள ஏரி குளங்கள் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது இருந்தும் இந்த ஏரி குளங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதில் உள்ள ஏரி குளங்களில் ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகள் என இருந்து தண்ணீரை மாசு படுத்தியும் மேலும் அந்த தண்ணீரை மக்கள் உபயோகப்படுத்த முடியாமலும் இருந்து வந்தது. இதை அடுத்து தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரி மாணவர்கள் இங்கு உள்ள குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளை அகற்றி ஏரி குளங்களை தூய்மைப்படுத்துவது என முடிவுசெய்து இந்த முயற்சியில் இறங்கத் தொடங்கினர். முதல்கட்டமாக பண்ணவயல் கிராமத்திலுள்ள வண்ணான் குளத்தை சுத்தம் செய்ய களமிறங்கினர் .கடந்த ஒரு வார காலமாக இந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இதைப்பார்த்த உள்ளூர் இளைஞர்கள் தாங்களாக முன்வந்து இந்த சமூக பணியில் தங்களையும் இணைத்துக்கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வண்ணான்குளம் செடிகொடிகள் மண்டி மிகவும் ஆபத்தான நிலையிலிருந்தாலும் தயங்காது ஆபத்தை எதிர்கொள்ள தயாரான நிலையில் இந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் துணிச்சலாக இப்பணியில் ஈடுபட்டு வருவது கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதற்காக கயிறு மற்றும் காற்றடைக்கப்பட்ட டியூப் ஆகியவற்றை பயன்படுத்தி மிக நேர்த்தியாக குளத்திலுள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் முதல் கட்டமாக இந்த குளத்தை சுத்தம் செய்து முடித்த பின் அடுத்தடுத்த குளங்களை கல்லூரிக்கு விடுமுறை உள்ள நாட்களில் தாங்கள் இந்தப் பணியை தொடர போவதாகும் . மேலும் இது தவிர ஒவ்வொரு பகுதியிலும் ஏரி குளங்கள் மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளிலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப் பணியை மேற்கொள்ளப் போவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.