ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

author img

By

Published : Aug 25, 2020, 8:30 PM IST

சென்னை: மாநிலம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 2 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தல் ஈடுபட்டனர்.

protest
protest

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடைகளை இரண்டு மணிநேரம் மூடி போராட்டத்தை நடத்தினர். அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உடன்பாடு ஏற்படாததால் இன்று பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்:

  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
  • கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
  • பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், மேலும் வேலை நேரத்தை மாலை 5 மணியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடை ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
across Tn tasmac employees are in strike
போராட்டத்தில் ஊழியர்கள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகர் டாஸ்மாக் கடை முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது ஊழியர் சுரேஷ் என்பவர் திடீரென தனது உடல் மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி தீக்குளிக்க முயன்ற சுரேஷை கைது செய்தனர்.

across Tn tasmac employees are in strike
டாஸ்மாக் கடை ஊழியர் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 210 கடைகளில் பணியாற்றும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியார்கள் காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை 2 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

across Tn tasmac employees are in strike
டாஸ்மாக் கடை ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம்!
நாமக்கல் மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் சட்டமைப்பு சார்பில் மாவட்டத்தில் உள்ள 180-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் திறக்காமல் பூட்டி வைத்து போராட்டத்தை நடத்தினர்.
across Tn tasmac employees are in strike
ஊழியர்கள்

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதி டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று ஒரு நாள் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கும்பகோணத்தில் இன்று காலை 2 மணி நேரம் கடை அடைக்கப்பட்டதோடு, காமராஜர் சாலையில் உள்ள மதுக்கடை முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

across Tn tasmac employees are in strike
போராட்டத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடை மூடல்

இதையும் படிங்க: மது வாங்க வந்தவர்களை விரட்டியடித்த பெண்கள்: குடிமகன்களுக்குப் பாதுகாப்பு கொடுத்த போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.