ETV Bharat / state

இலவசமாக டீ, சம்சா வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடும் மாற்றுத்திறனாளி

author img

By

Published : Mar 1, 2023, 12:39 PM IST

Updated : Mar 1, 2023, 12:50 PM IST

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் ஆவின் பாலகத்தில் மாற்றுத்திறனாளி கமலக்கண்ணன் விலையில்லா டீ, சம்சா வழங்கி வருகிறார்.

Etv Bharat
Etv Bharat

இலவசமாக டீ, சம்சா வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடும் மாற்றுத்திறனாளி

தஞ்சை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாளை, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கும்பகோணம் பழைய மீன் அங்காடி எதிரே சாஸ்திரா பல்கலைக்கழக சாலையில் ஆவின் பாலகம் நடத்தி வரும் கமலக்கண்ணன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ, சம்சா வழங்கி வருகிறார்.

இன்று (மார்ச்.1) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒருநாள் மட்டும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் விலையில்லா டீ, சமோசா மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், அவ்வழியாக அன்றாடப் பணிகளுக்கு செல்லும் ஏழை எளியோர், தூய்மைப்பணியாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியுடன் டீ அருந்தி செல்கின்றனர். இதனால், அங்கு பொதுமக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் சிறுவனை தூக்கிச்சென்ற மிக்சர் கம்பெனி ஓனர்.. கடனை முழுமையாக அடைந்த பிறகும் அராஜகம்..

Last Updated :Mar 1, 2023, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.