ETV Bharat / state

சங்கரன்கோயில் தீண்டாமை கொடுமைகளை கண்டித்து விசிக போராட்டம்

author img

By

Published : Oct 8, 2022, 9:42 AM IST

சங்கரன்கோவில் அருகே தீண்டாமை கொடுமைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

Etv Bharatசங்கரன்கோயில் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டித்து விசிக ஆர்பாட்டம்
Etv Bharatசங்கரன்கோயில் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டித்து விசிக ஆர்பாட்டம்

தென்காசி: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம், குறிஞ்சாகுளம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற தீண்டாமை கொடுமைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிசார்பில் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய திருமாவளவன், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் எதுவும் அறியாத பிஞ்சு குழந்தைகளிடம் தீண்டாமையை விதைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரிய செயல். 21வது நூற்றாண்டில் இந்த மாதிரி சம்பவம் நடைபெறுவது என்பது பெரும் குற்றம். பிஞ்சு குழந்தைகளிடம் சாதிய வன்முறையை காட்டி இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றார்.

மேலும் அந்தத் தீண்டாமை கொடுமையை செய்திருப்பவன் தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியானதால் காவல்துறை அவர்களை கைது செய்து இருக்கிறார்கள். இல்லையென்றால் காவல்துறை அவர்களை கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது.

இந்த சம்பவத்தில் ஊர் கட்டுப்பாடு என்று கூறியிருப்பதன் பின்னணியில் அந்த ஊர்க்காரர்கள், நாட்டாமை அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு ஊருக்குள் வரக்கூடாது என்ற உத்தரவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. சமூக வலைதளங்கள் வருவதற்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தியுள்ளது.

சங்கரன்கோயில் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டித்து விசிக ஆர்பாட்டம்

தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கக்கூடிய இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்ற பொழுது அரசு பஸ் கண்ணாடியில் சுவரொட்டி ஒட்டியும், வால் போஸ்டர்கள் ஒட்டியும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வோம். ஆரம்ப காலத்தில் காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் மீது பொய் வழக்குகள் போட்டனர். அதனையும் தாங்கிக் கொண்டு என்னோடு பயணித்த அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு வேலையில் இருந்து கொண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக எனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். அதேபோல் குறிஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள காந்தாரியம்மன் கோயில் கட்டுவது சம்பந்தமாக தமிழக முதல்வர் ஒரு கமிட்டி அமைத்துள்ளார்.

வழக்கை திரும்ப பெற கோரிக்கை:இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ ஆகியோரிடம் பேசி உள்ளேன். இது சம்பந்தமாக இருதரப்பு சமுதாய மக்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த ஊரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 160 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நட்ட விவகாரத்தில் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல்துறையினர் அந்த வழக்கை திரும்ப பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை வாங்கிய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. சனாதனத்தை வலுவாக இருக்கக்கூடிய கட்சியாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த கட்சிகளில் இருந்தாலும் அவர்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இவ்வாறு தொல் திருமாவளவன் எம்பி பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் டேனியல் சிங், சதுரகிரி முருகன், சுரேஷ், சுந்தர், தமிழப்பன், இக்பால், கதிரேசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:தென்காசியில் மான் வேட்டை 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.