ETV Bharat / state

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 24, 2020, 9:53 PM IST

தென்காசி: திருநெல்வேலி - தென்காசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Two-wheeler collides with lorry - Youth killed!
Two-wheeler collides with lorry - Youth killed!

தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்குமரன் (32). திருமணமான இவருக்கு கடந்த பத்து நள்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் பணி முடிந்து திருநெல்வேலி - தென்காசி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சம்பா தெரு அருகே வந்தபோது, எதிரேவந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அருள்குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக்கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாலத்திலிருந்து விழுந்து கட்டடத் தொழிலாளி பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.