ETV Bharat / state

தென்காசி கல்லூரிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 10:06 PM IST

தென்காசியில் மாவட்ட ஆட்சியர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து 18வயது பூர்த்தியான மாணவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக அணைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

தென்காசி: 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறும். இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் வரைவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தமிழ்நாட்டில் இன்று (அக்.27) முதல் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் முன்னதாக வரையறுக்கப்பட்ட வாக்களார் பட்டியலை வெளியிட்டு, அதில் மேலும் வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் என 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் பட்டியலை வரையறுக்க சிறப்பு முகாம்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் தென்காசி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மேலும் 18வயது பூர்த்தியான மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக அணைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டார். அதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

மாவட்டம்

மொத்த எண்ணிக்கை

(ஆண்@பெண் வாக்காளர்கள்)

மூன்றாம் பாலினத்தவர்
தென்காசி 13,3,062 155

தொகுதி வாரியான வாக்காளர் பட்டியல்:

தொகுதி வாக்காளர் மொத்த எண்ணிக்கை
தென்காசி சட்டமன்றம் 2,88,509
ஆலங்குளம் சட்டமன்றம் 2,55,269
கடையநல்லூர் சட்டமன்றம் 2,75,895
சங்கரன்கோவில் சட்டமன்றம் 2,42,550

கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்: இந்தத் தரவுகளின் அடிப்படையில் மாவட்டத்தில் மறுசீரமைப்புக்குப் பின்னர், உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 517 கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டத்தில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவைகளுக்கு நான்கு நாட்கள் முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளார். குறிப்பாக 18 வயது பூர்த்தியானவர்களை சேர்க்கும் விதமாக அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.