பூலித்தேவர் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலையிட்டு மரியாதை..
Puli Thevar Birthday Celebration in Tenkasi: சுதந்திர போரட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாள் விழா இன்று (செப்.1) நெற்கட்டும் செவல் கிராமத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தென்காசி: 1722ஆம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில், நெற்கட்டும் செவல் பாளையத்தை ஆண்டு வந்த மன்னர் தான் பூலித்தேவர். இவர் வெள்ளையர்களின் ஏகாதிபதியத்தை எதிர்த்து ஒரு பிடி அளவு மண் கூட தரமாட்டேன் என போராடிய முதல் சுதந்திர போராட்ட மன்னர் ஆவார். இந்நிலையில், இவரது 308வது பிறந்த நாள் விழாவானது, இன்று (செப்.1) நெற்கட்டும் செவல் பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவினை ஒட்டி, காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், அப்பகுதி முழுவதும் திருவிழா கோலமாகவே காணப்பட்டு வரும் நிலையில், சுற்றுவட்டார கிராமத்தில் இருந்தும், தென்காசி மாவட்டம் முழுவதில் இருந்து ஏராளமான கட்சி பிரமுகர் மற்றும் பொதுமக்கள் அவரது திருவுருட சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் பூலித்தேவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது வாரிசுதாரர்கள் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தியது மட்டுமின்றி, ஊரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர். பின்னர் பூலித்தேவரின் திருவுருவ சிலைக்கு சிறப்பு பூஜைகளும் நடைப்பெற்றது. மேலும் ஊர் பொதுமக்களும் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதனை அடுத்து, சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல், தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், தனுஷ் குமார், சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோரும் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டு, காலை முதல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையொட்டி நெற்கட்டும் செவல் கிராமத்திற்கு, ஏழு மாவட்டங்களில் இருந்து செல்லும் வழியெங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும், சங்கரன்கோவில் மற்றும் அதனை உள்ளிட்ட பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Commercial LPG: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு.. சென்னையில் கேஸ் விலை என்ன?

