ETV Bharat / state

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டட பூமி பூஜை

author img

By

Published : Dec 11, 2020, 1:50 PM IST

தென்காசி: 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்காசி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக முதலமைச்சர் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

tenkasi
tenkasi

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமானது. மாவட்டம் பிரிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைவதற்கான புதிய அலுவலக கட்டடம் இடம் தேர்வுசெய்யும் பணி நடந்துவந்தது. இதில் 12-க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் அப்பகுதிகளை வருவாய்த் துறை செயலர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை அருகே உள்ள 13 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வுசெய்யப்பட்டது. அங்கு இன்று (டிச. 11) 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு மாடியில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தென்காசி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், தென்காசி எம்எல்ஏ செல்வம் மோகன்தாஸ், வாசுதேவ நல்லூர் எம்எல்ஏ மனோகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தேனி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.