ETV Bharat / state

விவசாயி வீட்டில் 40 சவரன் நகை, ரூ.3.50 லட்சம் கொள்ளை!

author img

By

Published : Feb 15, 2021, 2:41 PM IST

தென்காசி: ஆலங்குளம் அருகே விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து 40 சவரன் நகை, ரூ.3.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

40 shaving jewelery, robbery of Rs 3.50 lakh by breaking into a farmer's house bur40 shaving jewelery, robbery of Rs 3.50 lakh by breaking into a farmer's house bureaueau
40 shaving jewelery, robbery of Rs 3.50 lakh by breaking into a farmer's house bureau

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த உடையாம்புளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்து (52). இவரது மனைவி வேலுமயில். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று (பிப்.14) காலை முத்து தன் மனைவியுடன் வயலுக்கு சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த அவர்களின் மகன் முருகன் (21), 3 மணியளவில் நண்பர்களுடன் விளையாடச் செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீடுதிரும்பிய போது, வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த நகைப்பெட்டிகள் சிதறி கிடந்துள்ளன.

வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் பூட்டை திறந்து பீரோவிலிருந்த 40 சவரன் நகை, ரூ.3.50 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆலங்குளம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்து விசாரணை நடத்தினர். அதன்பின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ஒரேநாளில் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.