ETV Bharat / state

பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியது அதே கட்சியைச் சார்ந்தவர்களாகத் தான் இருக்கும் - சுப. வீரபாண்டியன் ஆருடம்

author img

By

Published : Feb 10, 2022, 10:57 PM IST

சிவகங்கையில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், 'பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியது அதே கட்சியினராகத் தான் இருக்கும். NIA விசாரணையில் அவர்கள் தான் பிடிபடுவார்கள். அதிமுகவின் சாதனைகள் குறித்து எடுத்துக் கூறி வாக்கு கேட்பது திமுகவிற்குத் தான் சாதகமாக இருக்கும். மேலும், நாம் தமிழர் கட்சி ஓரிடத்திலாவது வெற்றி பெறவேண்டும். டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி இவ்வளவு பேசுகிறது' என்று தெரிவித்தார்.

பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியது பாஜகவா தான் இருக்கும் OR நாம் தமிழர் கட்சி டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி இவ்வளவு பேசுகிறது - சுப. வீரபாண்டியன்
பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியது பாஜகவா தான் இருக்கும் OR நாம் தமிழர் கட்சி டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி இவ்வளவு பேசுகிறது - சுப. வீரபாண்டியன்

சிவகங்கை: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும் 11 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தநிலையில், திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிவகங்கை அரண்மனைவாசல் முன்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக்குழுத் தலைவராக உள்ள சுப.வீரபாண்டியன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அதிமுக செய்த நலத்திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்தால் திமுகவிற்குத் தான் நல்லது சுப. வீரபாண்டியன்
அதிமுக செய்த நலத்திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்தால் திமுகவிற்குத் தான் நல்லது சுப. வீரபாண்டியன்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியது அதேகட்சியினராகத் தான் இருக்கும். தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் அவர்கள் தான் பிடிபடுவார்கள். அதிமுக நலத்திட்டங்களைக் கூறி வாக்கு கேட்டால் வருகிற தேர்தலில் அவர்களுக்கு வாக்கு வராது.

பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியது பாஜகவா தான் இருக்கும் - சுப. வீரபாண்டியன்

இதையும் படிங்க: பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் குண்டு வீச்சு - நடந்தது என்ன?

அதிமுகவினர் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது நாங்கள்தான், விலைவாசி உயர்வுக்குக் காரணம் நாங்கள் தான் எனக்கூறி வாக்கு கேட்க முடியுமா, தமிழ்நாடு முழுவதும் ஊழல் நடந்துள்ளது. ஊழல் எல்லாம் அதிமுகவின் சாதனை என்று சொல்ல முடியுமா, அதிமுக செய்ததைக் கூறி வாக்கு சேகரித்தால் திமுகவிற்குத் தான் நல்லது.

அதிமுகவின் திட்டங்களை திமுக செயல்படுத்துகிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ் கூறினால் அது எந்தத் திட்டம் என்று வரையறுத்துச் சொல்ல வேண்டும்" என்றார்.

சிவகங்கையில்  திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் பரப்புரை
நாம் தமிழர் கட்சி டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி இவ்வளவு பேசுகிறது - சுப. வீரபாண்டியன்

இதையும் படிங்க: "எங்களை கோழைத்தனமாக தாக்க வேண்டாம்" - அண்ணாமலை

மேலும் அவர், ’நாம் தமிழர் கட்சி ஓரிடத்திலாவது வெற்றி பெறவேண்டும். டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி இவ்வளவு பேசுகிறது. கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் பிரச்னை தமிழ்நாட்டில் பரவ வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்குத் தமிழ்நாட்டில் ஒரு போதும் இது மாதிரி கலாசாரம் பரவாது. இங்கு உள்ள இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமனும் மச்சானுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சிவகங்கையில்  திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் பரப்புரை
சிவகங்கையில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் பரப்புரை

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடந்ததில்லை: சீமான் விமர்சனம்

தமிழ்நாட்டின் தெருக்களில் கூட மதச்சண்டைகள் வந்ததில்லை. 1947ஆம் ஆண்டு நவகாளி போராட்டக் கலவரத்தில்கூட இந்தியாவே பற்றி எரிந்தபோதும், தமிழ்நாடு அமைதி பூங்காவாகத் தான் இருந்தது.

உலகம் முழுவதும் மனிதர்கள் மதச்சண்டைகளால் மோதக் கூடாது. மதக் கலவரத்தை உருவாக்க நினைக்கிற பாரதிய ஜனதா கட்சியைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவே புறக்கணிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்

இதையும் படிங்க: திமுகவில் போலி பேர்வழிகள் சிலர் உள்ளனர்... இன்னும் 2 நாட்களில்... - அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.