ETV Bharat / state

கொந்தகையில் கொத்துக்கொத்தாய் முதுமக்கள் தாழிகள்- பரபரப்பை ஏற்படுத்தும் கீழடி

author img

By

Published : Mar 13, 2020, 6:11 PM IST

சிவகங்கை: கீழடி ஆறாம் கட்ட தொல்லியல் ஆய்வின் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொந்தகை அகழாய்வில் கொத்துக்கொத்தாய் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

keezhadi konthagai excavation burial site mud கொந்தகை அகழாய்வு களம் முதுமக்கள் தாழிகள் கீழடி konthagai excavation site
konthagai excavation site

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக தற்போது ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடி மட்டுமன்றி, அதன் அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகியப் பகுதிகளிலும் ஆய்வுப் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.

எதிர் கொந்தகை மட்டும் பண்டைய காலத்தில் ஈமக்காடாகும். அங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் இறந்தவர்களைப் புதைக்கின்றப் பகுதி என்பதால் கீழடி அகழாய்வு முதல் முறையாக இந்த இடமும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஒரே ஒரு முதுமக்கள் தாழி, இங்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கே அகழ்ந்தெடுக்கப்பட்ட இரண்டு குழிகளில் ஒரு குழியில் மட்டும் ஏறக்குறைய 6க்கும் மேற்பட்ட கடைகள் என்று அழைக்கப்படுகின்ற தாழிகள் இன்று கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பாறைகளில் இருந்து எடுக்கப்படும் எலும்புக் குவியல்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலமாக கரிம படிவ ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

கொந்தகை அகழாய்வு களம்

ஆகையால், தாழிகள் கண்டெடுக்கப்பட்ட அக்குறிப்பிட்ட குறியில் மட்டும் சூரிய வெப்பம் நேரடியாக பாதிக்காத வகையில் கூரை அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அகழாய்வு தளத்தில் மட்டும் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் அத்துறையின் அலுவலர் முத்துக் கருப்பு, மாணவ, மாணவியர் 4-பேர் உட்பட பணியாட்கள் 40-க்கும் மேற்பட்டோர் தற்போது பணி செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு: வெளியே தெரிந்த செங்கல் கட்டுமான தொடர்ச்சி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.