ETV Bharat / state

சிவகங்கை காட்டுத் தீ: கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்கள்

author img

By

Published : Mar 5, 2020, 7:58 AM IST

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் 2500 அடி உயரத்தில் காட்டு தீ பரவியது, கிராம மக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மலையில் ஏற்பட்ட தீ விபத்து
மலையில் ஏற்பட்ட தீ விபத்து

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புதுக்கோட்டை - சிவகங்கை மாவட்ட எல்லைப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க, 3,750 அடி உயரம் கொண்ட பிரான்மலை உள்ளது.

இந்த மலையில் 2,500 அடி உயரத்தில், மாலை 6 மணியளவில் காட்டு தீ பரவியதை கிராம மக்கள் கண்டறிந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்களுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுகப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்களின் உதவியுடன் பல மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மலையில் ஏற்பட்ட தீ விபத்து

சம்பவ இடத்தில் சிங்கம்புணரி வட்டாச்சியர் பஞ்சவர்ணம், சரக வன அலுவலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் முகாமிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.