ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு?  கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

author img

By

Published : Jul 25, 2019, 8:54 PM IST

சிவகங்கை: காரைக்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடந்ததாகக் கூறி அழகப்பா கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

students protest

காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) 1000 அடியில் ஆழ்துளைக் கிணறு போடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஆய்வு என நினைத்து போராட்டம் நடக்க வாய்ப்புள்ளது என கல்லூரி முதல்வர் துரை தற்காலிகமாக விடுமுறை அறிவித்தார். இந்நிலையில், மாணவர்களுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் விடுமுறையை முதல்வர் ரத்து செய்தார்.

அதன்பின், கல்லூரிக்கு வந்த மூன்றாம் ஆண்டு வணிகவியல் படிக்கும் இரண்டாம் சுழற்சி (இரண்டாம் ஷிஃப்ட்) மாணவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடப்பதாகக் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் வட்டாட்சியர் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூலை.25

காரைக்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு? - கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடப்பதாக கூறி அழகப்பா கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கலைகல்லூரியில்
மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) 1000 அடியில் மிகப் பெரிய அளவில் ஆழ்துளை கிணறு போடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஆய்வு என தவறாக நினைத்து போராட்டம் நடத்த கூடும் என்பதால் கல்லூரி முதல்வர் துரை தற்காலிகமாக விடுமுறை என்று நேற்று மாலை அறிவித்தார்.

இன்று மாணவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் விடுமுறையை ரத்து செய்தார். அதன் பின் கல்லூரிக்கு வந்த மூன்றாம் ஆண்டு வணிகவியல் இரண்டாம் சுழற்சி (இரண்டாம் சிப்ட்டு) படிக்கும் மாணவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடப்பதாக கூறி உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:போராட்டத்தில் ஈடுபட்ட மணவர்களிடம் வட்டாச்சியர் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.