ETV Bharat / state

2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் சிவகங்கை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

author img

By

Published : Jan 22, 2022, 10:12 PM IST

சிவகங்கையில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள், இரும்பு எச்சங்கள் உள்ளிட்டவற்றை சிவகங்கை தொல்நடைக்குழுவினர் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் ஒப்படைத்தனர்.

முதுமக்கள் தாழிகள் ஒப்படைப்பு
முதுமக்கள் தாழிகள் ஒப்படைப்பு

சிவகங்கை: இறந்தவர்களை நல்லடக்கம் செய்வது மனித குலத்தின் மாண்பாக இன்றும் இருந்து வருகிறது. ஆதி மனிதர்களிடத்திலும், இறந்தவர்களைப் பாதுகாப்பாக அடக்கம் செய்யும் முறை இருந்து வந்துள்ளது. அவர்களிடத்தில் உடலை அழியாமல் பாதுகாத்தால் மறுமை வாழ்வுக்கு அது உதவும் என்ற நம்பிக்கையும் இருந்துள்ளது.

விலங்குகளிடமிருந்து இறந்த மனித உடலைப் பாதுகாக்கும் வண்ணம் 3,500 ஆண்டுகளுக்கு முன்னாள் பெருங்கற்களை அடுக்கி கல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அக்காலம் வரலாற்றில் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது. இவை பல்வேறு இடங்களிலும் ஒரே மாதிரியாக காணப்படுவது வியப்புக்குரியது.

முதுமக்கள் தாழிகள் ஒப்படைப்பு

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை அடுத்த முத்தூர் வாணியங்குடியிலிருந்து கௌரிபட்டி விலக்கு சாலையின் வடக்குப் பகுதியில் கண்டறியப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி ஓடுகள், சிவப்புநிற ஓடுகள், கருப்பு நிற ஓடுகள், இரும்பு எச்சங்கள் ஆகியவற்றை சிவகங்கை தொல்நடைக்குழுவினர் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: அணைக்கரை காவிரி ஆற்றில் பாலத்தை இணைக்கும் பணியின்போது விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.