ETV Bharat / state

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு.. வெளியே தென்படும் நந்தி சிலை!

author img

By

Published : Aug 7, 2023, 2:26 PM IST

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் அணையில் உட்பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலை முழுவதுமாக வெளியே தென்படுவதால் அதனை காண ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.

வெளியே தென்படும் நந்தி சிலை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூரில் ஸ்டான்லி அணை உள்ளது. மொத்தம் 165 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 58 அடிக்கும் கீழ் நீர் சரிந்துள்ளது. இதனால், அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலை மற்றும் கிறிஸ்துவ தேவாலய கோபுரம் முழுமையாக வெளியே தெரிகிறது.

அணை கட்டப்பட்டபோது காவிரி கரையில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. அப்போது விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பண்ணவாடி, கோட்டையூர் செட்டிப்பட்டி கிராமங்கள் அனைத்தும் நீர் தேக்கப் பகுதிகளாக மாறி தண்ணீரில் மூழ்கின. அணை நீர்மட்டம் சரிய தொடங்கும் போது நீரில் மூழ்கி இருக்கும் தேவாலய கோபுரம், ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தென்படுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமானது கடந்து மூன்று மாதங்களாக கிடுகிடுவென குறைந்தது. அணையின் நீர்த்தேக்க பகுதிகள் பல்வேறு இடங்களில் நீரின்றி வறண்டு போய் காணப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிந்து நிலையில் அணையில் உட்பகுதியில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நந்தி சிலை முழுவதுமாக வெளியே தெரிகிறது.

இதையும் படிங்க:வீட்டிற்கு முன்பு மது அருந்தக் கூடாது என்று கூறியதால் கத்திக்குத்து; மீட்கச் சென்ற இளைஞர் கொலை!

மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 57.94 அடியாக உள்ளதால் அணையின் நீர் பிடிப்பு பகுதி பல கிலோ மீட்டருக்கு வறண்டு காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நந்தி சிலை முழுமையாக காட்சியளிக்கிறது. ஆனால் நேற்று முன் தினம் மாலை முதல் மழை பெய்து வருவதால் கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது அதிகரிக்க தொடங்கியுள்ளது .

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 2,406 கன அடியாக இருந்த நீர்வரத்தானது மாலையில் 2,862 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 57.94 அடியாகவும், நீர் இருப்பு 23 .17 டிஎம்சியாக உள்ளது. இந்த நிலையில், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 9 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே, மேட்டூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் பண்ணவாடி பரிசல் துறையில் சவாரி செய்தும், அணையின் நீர்த்தேக்க பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை மற்றும் கிறிஸ்துவ தேவாலய கோபுரத்தை கண்டும் ரசித்தும் வருகின்றனர்.

இதையும் படிங்க:வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து; கரும்புகை மண்டலமாக காட்சியளித்த குடியிருப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.