ETV Bharat / state

’தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பட்டியல் சாதிப் பிரிவிலிருந்து நீக்க வேண்டும்’ - தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

author img

By

Published : Nov 26, 2019, 10:06 AM IST

Updated : Nov 26, 2019, 1:12 PM IST

சேலம்: தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பட்டியல் சாதிப் பிரிவிலிருந்து நீக்கி வேளாண் மரபினர் என்ற புதிய பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

salem district news
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டிலுள்ள பட்டியல் சாதிப் பிரிவிலுள்ள குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர், பள்ளர், வாதிரியார், தேவேந்திர குலத்தார் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர் என சான்றிதழ் அளிக்கவும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பட்டியல் சாதிப் பிரிவிலிருந்து நீக்கி வேளாண் மரபினர் என்ற புதிய பிரிவில் கொண்டுவந்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் வழங்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 150க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

திருவள்ளூரில் தமிழக முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

பின்னர், தேவேந்திர குல வேளாளர் என்று மாற்றி அரசாணை வெளியிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர். மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் கறுப்புச் சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறக்க வேண்டி விவசாயிகள் போராட்டம்!

Intro:தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சேலத்தில் இன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Body:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பட்டியல் சாதி பிரிவிலுள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியார், தேவேந்திரகுலத் தான் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பிரிவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

(பேட்டி : ஜீவஜோதி, சேலம் வடக்கு மண்டல செயலாளர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்)


Conclusion:சென்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்திலும் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பிரிவாக அறிவிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியும் அதிமுகவும் கூறிய நிலையில் தேர்தல் முடிந்ததும் மறந்து விட்டதாக குற்றம்சாட்டிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், வரும் அனைத்து தேர்தல்களிலும் தங்களுக்கு கோரிக்கையை நிறைவேற்ற அரசியல் கட்சிகளை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Nov 26, 2019, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.