ETV Bharat / state

'எனது தந்தை சாவுக்கும், ஸ்டாலினுக்கும் தொடர்பு இல்லை'- வீரபாண்டி ராஜா

author img

By

Published : Oct 15, 2019, 9:49 AM IST

சேலம்: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்குத் திமுக தலைவர் ஸ்டாலின் தான் காரணம் என பாமக மூத்தத் தலைவர் அருள்மணி கூறியது முற்றிலும் தவறு என வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டி ராஜா

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்குத் திமுக தலைவர் ஸ்டாலின் தான் காரணம் எனவும், அவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாமகவைச் சேர்ந்த மூத்தத் தலைவர் அருள்மணி அண்மையில் தெரிவித்தார்.

வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல' - ராமதாஸ் காட்டமான அறிக்கை

இதையடுத்து அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வீரபாண்டி ராஜா கூறுகையில், ''தனது தந்தையின் மரணத்திற்குத் திமுக தலைவர் ஸ்டாலின் தான் காரணம் என பாமக மூத்தத் தலைவர் அருள்மணி கூறியது முற்றிலும் தவறு. எனது தந்தை சாவிற்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இருவருக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த பாமகவினர் முயற்சிக்கின்றனர்.

செய்தியாளர்களைச் சந்திக்கும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீரபாண்டி ராஜா!

மேலும் எனது தந்தை இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளாத பாமக தலைவர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தற்போது அவர் மீது மரியாதை உள்ளது போல நடித்து தந்தையின் மரணம் குறித்து நீதி விசாரணை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளை எளிதாக அறுவடை செய்ய முடியாது'' என்றார்.

இதையும் படிங்க:

நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் தாயார் பேட்டி

Intro:முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின்தான் காரணம் என பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக அவரின் மகன் வீரபாண்டி ராஜா தெரிவித்துள்ளார்.Body:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின்தான் காரணம் எனவும் அவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் அருள் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.

இதையடுத்து அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீரபாண்டி ராஜா கூறுகையில், தனது தந்தையின் மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின்தான் காரணம் என பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் கூறியது முற்றிலும் பொய் எனவும், ஸ்டாலினுக்கும் அவருக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தவே பாமகவினர் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் இறுதி அஞ்சலியில் கூட கலந்து கொள்ளாத ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தற்போது அவர் மீது மரியாதை உள்ளது போல அவரின் மரணம் குறித்து நீதி விசாரணை கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இதுபோன்ற பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளை எளிதாக அறுவடை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டி - வீரபாண்டி ராஜா, வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்...

Visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.