ETV Bharat / state

சேலத்தில் இறைச்சிக் கடைகளுக்கு சீல்

author img

By

Published : May 11, 2020, 9:35 AM IST

சேலம்: தடை உத்தரவை மீறி செயல்பட்ட மூன்று இறைச்சிக் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டன.

தடை உத்தரவை மீறிய இறைச்சிக் கடைகளுக்கு சீல்  சேலத்தில் தடை உத்தரவை மீறிய இறைச்சிக் கடைகளுக்கு சீல்!  இறைச்சிக் கடைகள்  சேலம் லேட்டஸ்ட் செய்திகள்  Salem Meat Shops Selead  Meat Shops  Salem Latest News  Sealed for meat shops in violation of prohibition orders  Meat Shops Sealed In Salem
Meat Shops

தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடை இயங்க மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மாநகராட்சியின் தடை உத்தரவை மீறி ஆட்டிறைச்சி கடை திறந்திருப்பதாக மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், அங்குள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டிறைச்சிகள் விற்பனைக்காகப் பேக்கிங் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 15 கிலோ ஆட்டு இறைச்சியைப் பறிமுதல் செய்து கடைக்குச் சீல் வைத்தனர்.

இதேபோல், சேலம் மணியனூர் பகுதியிலும் மாநகராட்சி உத்தரவை மீறி வீடுகளில் வைத்து ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டுவந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, 20 கிலோ ஆட்டு இறைச்சி, எடை தராசு, கறி வெட்டும் உபகரணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும் இதுபோல் தொடரும் பட்சத்தில் காவல் துறை மூலம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலுவலர்கள் எச்சரித்தனர்.

இதையும் படிங்க:அனுமதி பெறாமல் விற்பனை: 500 கிலோவுக்கு அதிகமான இறைச்சி பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.