ETV Bharat / state

உயிருக்கு ஆபத்து; காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமைடைந்த காதல் தம்பதி!

author img

By

Published : Sep 21, 2019, 7:03 PM IST

Updated : Sep 21, 2019, 7:15 PM IST

சேலம்: க திருமணம் செய்துகொண்ட திருமண ஜோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்புக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

காதல் தம்பதி

சேலம் மாவட்டம் பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதே ஊரின் அங்கம்மாள் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் இருவரும் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களிடம் முறையீடுகையில், சுரேந்திரன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்குப் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய சிவகாமிக்கு, பாண்டிச்சேரியில் காதலன் சுரேந்திரனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட திருமண ஜோடி

இந்நிலையில் பெண்ணின் குடும்பத்திலிருந்து அவரது பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இருவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி இன்று சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புகோரி தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:

"புன்னகை மன்னன்" பட பாணியில் மலையிலிருந்து குதித்த காதல் ஜோடி!

Intro:சேலத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம்.Body:
சேலம் பிள்ளையா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலம் அங்கம்மாள் காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகள் சிவகாமியுடன் காதல் ஏற்பட்டு இரண்டு வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சுரேந்திரன், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இருவரின் திருமணத்திற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி சிவகாமி வீட்டை விட்டு வெளியேறி பாண்டிச்சேரி சென்று காதலன் சுரேந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்,எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் எங்கள் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி, காதல் ஜோடி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி மணக்கோலத்தில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.Conclusion:
Last Updated : Sep 21, 2019, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.