ETV Bharat / state

பூ வரத்து அதிகரிப்பு: விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் வாங்க குவிந்த மக்கள்!

author img

By

Published : Oct 23, 2020, 5:28 PM IST

சேலம்: பூ வரத்து அதிகரித்திருந்தாலும், விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் பண்டிகை காலத்திற்காக பூவை வாங்க மக்கள் குவிந்தனர்.

பூக்களின் வரத்து அதிகரிப்பு: விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் வாங்க குவிந்த மக்கள்!
பூக்களின் வரத்து அதிகரிப்பு: விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் வாங்க குவிந்த மக்கள்!

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வரும் 25, 26ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக சேலத்தில் உள்ள, தொழில் நிறுவனங்கள், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் ஆயுதபூஜை கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள வஉசி பூ மார்க்கெட் பகுதியில் ஆயுதபூஜை கொண்டாட்டம், வழிபாட்டுக்காகப் பொதுமக்கள், சிறு வணிகர்கள் ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் கூடி அதிக அளவில் பூவை இன்று வாங்கிச் சென்றனர்.

வழக்கமாக கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ இன்று ஒரு கிலோ 240 ரூபாய்க்கும், குண்டுமல்லிப்பூ ஒரு கிலோ 700 ரூபாய் வரையிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து பேசிய பூ மார்க்கெட் வியாபாரி குமார், "சேலம் வஉசி பூ மார்க்கெட்டிற்கு ராயக்கோட்டை, பொம்மிடி, தேன்கனிக்கோட்டை, ஓசூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக அளவு பூ லோடு வருகிறது. சாமந்தி, காக்கரட்டான், குண்டு மல்லி, செண்டு மல்லி, ஜாதி மல்லி, ரோஜா எனப் பலவகை பூவை மார்க்கெட்டில் விற்பனை செய்கிறோம்.

கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பூவின் விலை குறைவுதான். இருந்தபோதும் தற்போது கடந்த இரண்டு நாள்களாக ஆயுதபூஜை பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பூவின் விலை சற்று உயர்ந்துள்ளது.

மல்லி ஒரு கிலோ 700 ரூபாய்க்கும், ஜாதிமல்லி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், காக்கரட்டான் ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், வெள்ளை அரளி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

பூவின் வரத்து அதிகரிப்பு: விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் வாங்க குவிந்த மக்கள்!

பூ வாங்க ஆயிரக்கணக்கானோர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஒரே இடத்தில் குவிந்தனர். இதனால் நோய்த்தொற்று ஏற்படும் இடர் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கல்லூரிகள் அடுத்த மாதம் தொடக்கம்... ஆனால்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.