ETV Bharat / state

’சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போக்சோவில் கைதுசெய்ய வேண்டும்’

author img

By

Published : Nov 16, 2019, 11:33 PM IST

சேலம்: கடந்த இரு நாட்களுக்கு முன்பு சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை போக்சோ சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

aidwa vasuki pressmeet

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள மாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கொடும் செயலில் ஈடுபட்ட நபர்களை காவல் துறை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரின் பெற்றோரையும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்துள்ளது என்பதற்கு ஓமலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமே உதாரணம். இந்தப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தும், இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மேலும் வேதனையளிக்கிறது .

இரண்டாம் வகுப்பு பயிலும் இந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகளை உடனே பிடித்து கைதுசெய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால், அவரிடம் ஆண் காவலர்கள் விசாரணை நடத்தக் கூடாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் நேற்றிரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியையும் அவரின் பெற்றோரையும் ஆண் காவலர்கள் மிரட்டிச் சென்றுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறோம் . இதுபோன்ற சம்பவம் இனி இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாத வகையில் அரசு நடவடிக்கையை வலிமைப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் வாசுகி பேட்டி

மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகன் கைது!

Intro:தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளதால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி குற்றம் சாட்டியுள்ளார்.




Body:சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள மாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார்.

சேலம் மாவட்டம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடும் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமியை யும் அவரின் பெற்றோரையும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்," தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து உள்ளது என்பதற்கு ஓமலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சம்பவமே உதாரணம்.

இந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்பது மேலும் வேதனை அளிக்கிறது .

இரண்டாம் வகுப்பு பயிலும் இந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது . குற்றவாளிகளை உடனே பிடித்து கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட சிறுமி என்பதால் அவரிடம் ஆண் காவலர்கள் விசாரணை நடத்தக் கூடாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியையும் அவரின் பெற்றோரையும் ஆண் காவலர்கள் மிரட்டி சென்றுள்ளனர் . இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறோம் . இதுபோன்ற சம்பவம் இனி தமிழகத்தில் ஏன் இந்தியாவிலும் கூட எங்கும் நடக்கக்கூடாது வகையில் அரசு நடவடிக்கையை வலிமைப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.


Conclusion:மேலும் அவர் கூறுகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிவாரண உதவியும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.