ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்

author img

By

Published : Dec 24, 2019, 4:32 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 12 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

varunkumar
varunkumar

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் சுற்றியுள்ள தீவுகளிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு அவ்வப்போது கடலட்டை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. ராமநாதபுரம் கடல் வழியாக கடத்தல் சம்பவத்தைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரம் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் நேற்றிரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களுக்கு அளித்த பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு வந்த தகவலையடுத்து காவல் துணை ஆய்வாளர் குணதீஸ் மற்றும் காவல் துறை அலுவலர்கள் பாம்பன் தெற்கு கடற்கரையிலிருந்து தனி படகு மூலம் பாம்பன் அருகேயுள்ள தீவுகளில் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி சென்றபோது அவர்கள் தங்கள் கையிலிருந்த ஒரு மூட்டையை கடலில் வீசிவிட்டு சென்றனர்.

இதனையடுத்து, கடலில் வீசிய மூட்டையை பரிசோதித்தபோது அதில், ஆறு பாக்கெட்டுகளில் சுமார் 12 கிலோ கஞ்சா மற்றும் ஜி.பி.எஸ் (திசைகாட்டும் கருவி) இருந்தது தெரியவந்தது. மேலும், தப்பிச் சென்றவர்களை பிடிப்பதற்காக அவர்களை விரட்டி சென்றபோது கடத்தல்காரர்கள் மூன்று பேர் கடலில் குதித்து மாயமாகினர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், "மாவட்ட காவல் துறையின் சிறப்பு எண்ணிற்கு பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்த இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நடுக்கடலுக்கு சென்ற காவல் ஆய்வாளர்கள் திறமையுடன் செயல்பட்டு அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு கடுமையான முயற்சி செய்தும் கடத்தல்காரர்கள் மற்றும் முக்கிய குற்றவாளிகள் தப்பியதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து யாரேனும் வருகிறார்களா? அல்லது இந்தப் பகுதிகளில் வேறு இடங்களில் கடத்தல்காரர்கள் மறைந்துள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: ‘விவசாயம் தொழில் அல்ல... வாழ்வியல்’ - விளக்கும் மாணவர்கள்!

Intro:இராமநாதபுரம்
டிச.24

இலங்கைக்கு கடத்த இருந்த 12 கிலோ கஞ்சா நடுக்கடலில் வைத்து காவல்துறை பறிமுதல்.Body:இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் சுற்றியுள்ள தீவுகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு அவ்வப்போது கடலட்டை, ,கஞ்சா,போதை பொருட்கள் கடத்தப்படுகிறன. இராமநாதபுரம் கடல் வழியாக கடத்தல் சம்பவத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரம் ரோந்து பணிகள தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொது மக்களுக்கு அளித்த பிரத்தியேக தொலைபேசி எண்ணுக்கு வந்த தகவலையடுத்து காவல் துணை ஆய்வாளர் குணதீஸ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பாம்பன் தெற்கு கடற்கரையில் இருந்து தனி படகு மூலம் பாம்பன் அருகே உள்ள தீவுகளில் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ஒரு நட்டு நோக்கி சென்றபோது அவர்கள் தங்கள் கையில் இருந்த ஒரு மூட்டை கடலில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
அந்த மூட்டையை எடுத்து சோதனை செய்தபோது அந்த மூட்டையில் ஆறு பாக்கெட்களில் சுமார் 12 கிலோ கஞ்சா மற்றும் ஜி.பி.எஸ் (திசைகாட்டும் கருவி)இருந்தது தெரியவந்தது. மேலும், தப்பிச் சென்றவர்களை பிடிப்பதற்காக அவர்களை விரட்டி சென்ற போது கடத்தல்கார ர்கள் மூன்று பேர் கடலில் குதித்து மாயமாகினர். இதனையடைத்து நாட்டு படகையும், கஞ்சாவையும் பாம்பன் தெற்கு வாடி கடற்கரைக்கு எடுத்து வந்த பாம்பன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் மாவட்ட காவல் துறையின் சிறப்பு எண்ணிற்க்கு பொது மக்கள் அளித்த தகவல் அடிபடையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்த இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நடுக்கடலுக்கு சென்ற காவல் ஆய்வாளர்கள் திறமையுடன் செயல்பட்டு அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்தல் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு கடுமையான முயற்சி செய்தும் கடத்தல்காரர்கள் மற்றும் முக்கிய குற்றவாளிகள் தப்பியதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பரிமாற்றத்திற்காக இலங்கையில் இருந்து யாரேனும் வருகிறார்களா அல்லது இந்தப் பகுதிகளில் வேறு இடங்களில் கடத்தல்காரர்கள் மறைந்து உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்றார்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.