ETV Bharat / state

சொத்துக்காக தாயைக் கட்டையால் அடித்துக் கொலைசெய்த மகன் கைது

author img

By

Published : Feb 12, 2020, 7:41 PM IST

ராமநாதபுரம்: திருவாடனை அருகே ஒரியூர் கிராமத்தில் சொத்துக்காக தாயைக் கட்டையால் அடித்துக் கொலைசெய்த மகனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

murder
murder

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஒரியூர் கிராமத்தில் வசித்துவருபவர் நாச்சரம்மாள் (70). இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் முனீஸ்வரன் தனது தாயார் நாச்சரம்மாளிடம் சொத்துக்களைப் பிரித்துத்தர தொடர்ந்து கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று வீட்டின் வெளியில் கிடந்த பனைமரக் கட்டையால் முனீஸ்வரன் தனது தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எஸ்.பி.பட்டிணம் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிந்து முனீஸ்வரனை கைதுசெய்தனர். மேலும் நாச்சம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: இளைஞர் கழுத்தறுத்துக் கொலை: முட்புதரில் உடல் வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.