ETV Bharat / state

ஆறு மணிநேரம் மின்வெட்டு - மக்கள் அவதி!

author img

By

Published : May 19, 2019, 3:21 PM IST

Updated : May 19, 2019, 4:42 PM IST

இராமநாதபுரம்: நகரப் பகுதிக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆறு மணி நேரத்திற்கு மேலாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம், நகர் பகுதியில் அதிகாலை 5 மணியில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை மிகவு சிரமத்திற்கு ஆளாகினர். மின் இணைப்பு துண்டிப்பால் வீட்டு பெண்கள் செய்யக் கூடிய அத்தியாவசிய வேலைகள் தடைபட்டது.

இது குறித்து மின் வாரிய அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தூத்துக்குடியில் - காவனூர் வழியாக இராமநாதபுரத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் உயர் கோபுரத்தில் வயர் இணைப்பு ஆர்.எஸ் மடை அருகே அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் இதனை சரி செய்யும் பணி முடிவடைந்த பினபு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது, என்றார்.

மின்வெட்டு -மக்கள் அவதி
Intro:இராமநாதபுரம்
மே.19
இராமநாதபுரம் நகர் பகுதியில் 6 மேலாக மின் இணைப்பு துண்டிப்பு மக்கள் கடும் அவதி.


Body:இராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் அதிகாலை 5மணியில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், முதியவர்கள், குழந்தைகள், நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள், வீட்டில் அத்தியாவசிய வேலைகளை செய்ய முடியாமல் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மின் வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தூத்துக்குடியில் இருந்து காவனூர் வழியாக இராமநாதபுரம் நகர் பகுதிக்கு மின் சாரம் கொண்டு செல்லும் மின் உயர் கோபுரத்தில் வயர் இணைப்பு ஆர் எஸ் மடை அருகே அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
மின் வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 6 மணி நேரத்துக்கு மேல் மின் விநியோக இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கின்றனர்.

பேட்டி- சுதர்சன்
- அப்துல்லா
-சிவாஜி.


Conclusion:
Last Updated : May 19, 2019, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.