ETV Bharat / state

பிளாஸ்டிக் முதல் பனை வரை - அசத்தும் ராமநாதபுரப் பெண்கள்!

author img

By

Published : Nov 19, 2019, 9:48 AM IST

ராமநாதபுரம்: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்கள் மூலம் விதவிதமான பொருட்களைச் செய்து ஆச்சரியப்படுத்துகிறார்கள் ராமநாதபுரம் பெண்கள். அவர்களைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/19-November-2019/5107372_87_5107372_1574135115160.png

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 'கடைக்குச் செல்லுனுமா எடுமா, அந்த பிளாஸ்டிக் கவர' எனச் சொல்லும் வார்த்தையை, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது என்ற ஒற்றை வார்த்தையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் பால், எண்ணெய் , மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு பிளாஸ்டிக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விதிவிலக்கு அளித்திருந்தார்.

palm products
பனை ஓலையினால் செய்யப்பட்ட அன்றாடப் பொருட்கள்

இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த சிறிது நாட்களில், மக்கள் மஞ்சள் பை எடுத்துக்கொண்டு கடைக்குக் கிளம்பத் தொடங்கினர். உணவகத்திலும் வாழை இலை, சில்வர் கவர் என மாறத் தொடங்கினர். அலுவலர்களும் தங்களால் முடிந்த வரை, கடைகளில் சோதனை செய்து, பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு குட் பை முழுவதுமாக சொல்லியதும், அதற்கு மாற்றாகப் பல பொருட்கள் மீண்டும் உருவெடுத்தன. அதில் முக்கியமாக பண்டைய காலத்திலிருந்து உணவுப் பொருளை இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல பயன்படும் பனை சார்ந்த பொருள்கள்.

முன்பு, பிளாஸ்டிக் பைகள் இல்லாத காலத்தில் பனையால் செய்யப்படும் பாயில் வைத்து சோறு அனுப்புவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் வருகைக்குப் பிறகு முற்றிலுமாக பனை, தென்னை ஓலையைச் சார்ந்த பொருள்கள் நலிவடைந்து அந்த மக்கள் கடுமையான பொருளாதார ரீதியான சிக்கலைச் சந்தித்து வந்தனர்.

palm products
பனைப் பொருட்கள் செய்யும் பெண்கள்

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த முடிவு அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. பழங்காலத்தில் பாய், பெட்டி, சின்ன கொட்டான் உள்ளிட்ட சிறிய பொருட்களை மட்டுமே செய்து வந்த நிலையில், தற்போது ராமநாதபுரத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்குச் சுயதொழில் எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் 250 வகையான பனை ஓலை பொருட்களைச் செய்து வருகின்றனர். இங்கு அழகன்குளம், பனைக்குளம், சாயல்குடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பலப் பகுதிகளில் உள்ள பெண்கள் தினமும் காலையிலிருந்து மாலை வரை பனைப் பொருள்களைத் தேவைக்கு ஏற்ப செய்து சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படுவதில் முக்கிய அம்சமாகப் பெண்கள், சிறுவர்கள் பயன்படுத்தும் குச்சி டப்பா, பெண்களுக்கான ரோஜாப்பூ, பூஜைப் பொருட்கள் எடுத்துச் செல்லும் கூடை, சாப்பாடு எடுத்துச் செல்லும் கூடை, அஞ்சறைப் பெட்டி பொக்கே, மலர்க் கொத்து, கீ செயின் போன்ற 30க்கும் மேற்பட்ட பொருள்களைச் செய்து அசத்தியுள்ளனர். இங்கு பணிபுரியும் பெண்கள் தினமும் சுமார் 500 முதல் 600 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகவும், இது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக் முதல் பனை - அசத்தும் ராமநாதபுரப் பெண்கள்

பனைப் பொருள் வீண் ஆனாலும், அது மண்ணுக்கு உரமாக மாறும் தன்மை கொண்டது. ஆனால், பிளாஸ்டிக் மண்ணின் தன்மையைக் கெடுத்து மண்ணை மலடாக்கி, அதன் சக்தியை உறிஞ்சி எடுத்து விடும் என்றும்; அதனால் மக்கள் பிளாஸ்டிக்கை கைவிட்டு பனை சார்ந்த இயற்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க : மண்ணை உண்டு வாழும் அதிசயப் பாட்டி!

Intro:பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேகமாக மாறி வரும் பனை பொருட்கள், விதவிதமான பொருட்களைச் செய்து ஆச்சர்யப்படுத்து இராமநாதபுரம் பெண்கள்.


Body: கடந்த 2018 உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் மாதம் 4️ தேதி ல் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தடிமன் பிளாஸ்டிக் பொருட்கள் வரும் ஜனவரி 1ஆம் தேதி 2019 ல் இருந்து தமிழ்நாட்டில் தடை செய்யப்படுகிறது என்றும் அறிவித்தார்.


இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் எவ்வாறு பொருட்களை பார்சல் செய்து அனுப்புவது என்ற கேள்வி எழுந்தது. தமிழக அரசு பால்,எண்ணெய் ,மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பொருள்களுக்கு பிளாஸ்டிகை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் விதிவிலக்கு அளித்திருந்தது.

இதனை, தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி 2019 இல் இருந்து பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. தமிழக மக்களும் பிளாஸ்டிக் பைகளை ஒதுக்கி வைத்துவிட்டு. பழைய நிலைக்கு திரும்பும் வகையில் மஞ்சள் துணிப்பை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் பழக்கத்தை துவங்கினர். பெரும்பாலான உணவகங்களிலு. பிளாஸ்டிக் பைகள் தவிர்க்கப்பட்டு அதற்கு பதிலாக வாழை இலை, சில்வர் கவர் பயன்படுத்த துவங்கினர்.
அதேவேளை சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளிலும் அதிகாரிகள் சோதனையிட்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர். இதனால் தமிழகமெங்கும் பெரும்பான்மையான பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படு குறைந்தது, குப்பை சேகரிக்கும் இடங்களிலும் பிளாஸ்டிக் இருப்பு வெகுவாக குறைந்தது. இதற்கு மாற்றாக பல பொருட்கள் உருவெடுத்தனர். அதில் முக்கியமாக பண்டைய காலத்திலிருந்து உணவு பொருளை இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல பயன்படும் பனை சார்ந்த பொருள்கள்.
தற்போது, மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது என்றால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. முன்பு, பிளாஸ்டிக் பைகள் இல்லாத காலத்தில் பனையால் செய்யப்படும் பாயில் வைத்து சோறு அனுப்புவதை மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் வருகைக்குப் பிறகு முற்றிலுமாக பனை, தென்னை ஓலை சார்ந்த பொருள்கள் நலிவடைந்து அந்த மக்கள் கடுமையான பொருளாதார ரீதியான சிக்கலை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த, காலங்களில் பனையை பயன்படுத்தி ஒரு சில பொருட்களை மட்டுமே அவர்கள் செய்து வந்தனர், பாய்,பெட்டி,சின்ன கொட்டான், உள்ளிட்ட சிறிய பொருட்களை மட்டுமே செய்து வந்தனர். தற்பொழுது இராமநாதபுரத்தில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இராமநாதபுரத்தில் உள்ள பெண்களுக்கு சுயதொழில் எண்ணத்தை உருவாகும் நோக்கில் பனை ஓலை கொண்டு பல வகையான பொருள்கள் செய்யலாம் என்றும் 250 வகையான பொருள்கள் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் கூறி, இதன் மூலம் தற்போது இராமநாதபுரத்தில் உள்ள அழகன்குளம், பனைக்குளம்,சாயல்குடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கிராமங்களில் பெண்கள் தினமும் காலையில் இருந்து மாலை வரை பனைப் பொருள்களை தேவைக்கு ஏற்ப செய்து சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.

தற்போது, இந்த பெண்கள் சிறுவர்கள் பயன்படுத்தும் குச்சி டப்பா, பெண்களுக்கான ரோஜாப்பூ, பூஜை பொருட்கள் எடுத்துச் செல்லும் கூடை, சாப்பாடு எடுத்துச் செல்லும் கூடை, அஞ்சரை பெட்டி பொக்கே, மலர் கொத்து, கீ செயின் போன்ற 30க்கும் மேற்பட்ட பொருள்களை செய்து அசத்தியுள்ளனர்.
இது மட்டுமின்றி இந்தப் பெண்கள் தங்களுடைய கணவரின் வருமானத்தை எதிர்பாராமல் ஒரு நாளைக்கு சுமார் 500 முதல் 600 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் இது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும் மேலும் தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறது என்றனர்.
மேலும், பனை பொருள் வீண் ஆனாலும் அது மண்ணுக்கு உரமாக மாறும் தன்மை கொண்டது. ஆனால், பிளாஸ்டிக் மண்ணின் தன்மையை கெடுத்து மண்ணை மலடாக்கி அதன் சக்தியை உறிஞ்சி எடுத்து விடும் என்றும் அதனால் மக்கள் பிளாஸ்டிக்கை கைவிட்டு பனை சார்ந்த பொருள்களில் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


பேட்டி1: நல்லாயி
பேட்டி2: சினீயம்மாள்
அழகன்குளம்
பேட்டி3: லெட்சுமி, பனைகுளம்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.