ETV Bharat / state

'ராமநாதபுரத்தில் வாக்குகள் எத்தனை சுற்றுகள் எண்ணப்படும்'

author img

By

Published : Apr 30, 2021, 10:40 PM IST

ராமநாதபுரம்: 4 சட்டப்பேரவைத் தொகுதியில் எத்தனை சுற்றுகள் எண்ணப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

Ramanathapuram' District Election Officer
Ramanathapuram' District Election Officer

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை என நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்து. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

வருகின்ற மே 2️ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது,"வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேசைகளும் , தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 8 மேசைகளும் நிர்ணயிக்கப்பட்ட அறைகளில் தனித்தனியாக அமைக்கப்படும்.

ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் , வாக்கு எண்ணிக்கை உதவியாளர், பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் எந்த மேஜையில் பணியாற்றிட வேண்டும் என்பது குறித்து கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

பரமக்குடி தொகுதிக்கு 26 சுற்றுகள் , திருவாடானை தொகுதிக்கு 30 சுற்றுகள், ராமநாதபுரம் தொகுதிக்கு 31 சுற்றுகள், முதுகுளத்தூர் தொகுதிக்கு 32 சுற்றுகள் என முறையே வாக்குகள் எண்ணப்படும்.

ஒரு சுற்று எண்ணிக்கைக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து எடுக்கப்பட்டு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு , அடுத்த சுற்றுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்படும்.

அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ஒவ்வொரு சுற்று வாரியாக மொத்த வாக்கு எண்ணிக்கை விவரங்களை அறிவிப்பார்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.