ETV Bharat / state

கடத்தலும் குதிரை பேரமும்! பல்வேறு இடங்களில் அதிமுக-திமுகவினரிடையே மோதல்

author img

By

Published : Jan 7, 2020, 11:39 AM IST

ராமநாதபுரம்: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களைக் கடத்துவதிலும் அவர்களிடம் குதிரைபேரம் பேசுவதிலும் அதிமுக, திமுகவினரிடையே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.

திமுக - அதிமுக இடையே மோதல்
திமுக - அதிமுக இடையே மோதல்

அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 இடங்களில் அதிமுக 6, திமுக 7 இடங்களில் வெற்றிபெற்றன. இந்த ஒன்றியத்தில் ஊராட்சிக்குழுத் தலைவர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிக்கு திமுகவிற்கு போதிய இடங்கள் இருந்தும் ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுக, திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் அதிமுகவினர் 11ஆவது வார்டில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் அ. சிவக்குமாரிடம் பேசி தங்களோடு சேர்த்துக்கொண்டனர். இவர்கள் பதவியேற்ற பின்னர் வெளியே வந்த சிவக்குமாரை அதிமுகவினர் வரவேற்றுள்ளனர். இதன்படி, அதிமுகவின் பலம் 7 ஆகவும், திமுகவின் பலம் 6 ஆகவும் ஆனது.

இதனால் கோபமடைந்த திமுகவினர் அதிமுகவினருடன் மோதலில் ஈடுபட்டனர். உடனடியாகக் காவல் துறையினர் இருதரப்பினரையும் சமரசம்செய்து சிவலிங்கத்தை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

சுயேச்சைகளை கடத்துவதில் மும்முரம்

இதேபோல், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 8ஆவது வார்டு ஒன்றிய உறுப்பினராகத் தேர்வாகியுள்ள சுயேச்சை வேட்பாளரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆர். தர்மர் உள்ளிட்ட சிலர் கடத்திச் சென்றதாக அவரது மகன் ராஜா முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாகப் பதவியேற்ற சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்களை திமுகவினர் வேனில் கடத்திச் சென்றனர். இதனால் அதிமுக-திமுக தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் இருதரப்பினரிடையே பேசி அமைதிப்படுத்தினர்.

திமுக - அதிமுக இடையே மோதல்

அமமுகவுக்கு போட்டிபோட்ட திமுக-அதிமுக

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணி ஐந்து இடங்கள், அதிமுக ஐந்து இடங்கள், அமமுக இரண்டு இடங்கள், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றுள்ளனர்.

இவர்கள் பதவியேற்ற பின்னர் வெளியே வந்த அமமுகவைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி, மலேசியா பாண்டி என்ற இரு ஒன்றிய கவுன்சிலர்களை அதிமுக, திமுகவினர் கடத்த முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் கடத்த முயன்றவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலையச் செய்தனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி ஸ்டாலினுக்கான பரிசு - முன்னாள் அமைச்சர் பெருமிதம்!

Intro:இராமநாதபுரம்
ஜன.5

இராமநாதபுரம்
திருப்புல்லாணியில் சுயேட்சை ஒன்றிய உறுப்பினரை அதிமுகவினர் கடத்த முயன்றதாக திமுகவினர் குற்றம் சாட்டியதால் இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. பரமக்குடி திமுக உறுப்பினர் அதிமுகவிற்கு மாறியதால் ஊராட்சிக்குழு தலைவர் பதவியை திமுக கோட்டைவிட்டது.Body:இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 170 ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மண்டபம் ஒன்றியம் 8வது வார்டில் சுயேட்சையாக அ.சபியாராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதி 169 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் இன்று அந்தந்த ஒன்றியங்களில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 இடங்களில் அதிமுக 6, திமுக 7 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த ஒன்றியத்தில் ஊராட்சிக்குழு தலைவர் பதவி பெண்களுக்கு(பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. ஊராட்சிக்குழு தலைவர் பதவிக்கு திமுகவிற்கு போதிய இடங்கள் இருந்தது. இருந்தபோதும் ஊராட்சிக்குழு தலைவர் பதவியை பிடிக்க அதிமுக, திமுகவிடையே கடும் போட்டி நிலவுகிறது. .
அதிமுகவினர் 11வது வார்டில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் அ.சிவக்குமாரை பேசி தன்வசமாக்கியது. சிவக்குமாரும் திமுகவிலிருந்து மாறி அதிமுகவில் இணைந்தார். சிவக்குமார் நேற்று அதிமுக கட்சி வேட்டியுடன், பரமக்குடி அதிமுக எம்எல்ஏ என்.சதன் பிரபாகர் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோருடன் பதவியேற்பு விழாவிற்கு வந்தார். அதனால் திமுகவின் பலம் குறைந்து, அதிமுக ஊராட்சிக்குழு தலைவர் பதவியை தக்க வைத்துள்ளது.

திருப்புல்லாணி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றிய உறுப்பினர்களில், அதிமுக 5, திமுக 5 இடங்களையும், காங்கிரஸ் ஒன்றிலும், சுயேட்சை 3 இடங்களையும் பிடித்துள்ளன.
அதிமுக 3 சுயேட்சை உறுப்பினர்களையும் தன்வசமாக்கினால் மட்டுமே ஊராட்சிக்குழு தலைவர் பதவியை பிடிக்க முடியும். இந்நிலையில் இன்று 14 உறுப்பினர்களும் ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றனர். பதவியேற்றுவிட்டு வெளியே வந்த சிவலிங்கத்தை அதிமுகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்று, காரில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது திமுகவினர் அதைத்தடுக்க முற்பட்டனர். அதனால் அதிமுக, திமுகவினரிடையை மோதல் ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் இருதரப்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி, ஒன்றிய வார்டு உறுப்பினர் சிவலிங்கத்தையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். சிவலிங்கத்தை அதிமுகவினர் கடத்த முயற்சித்தனர் என திமுகவினர் குற்றம் சாட்டினர். அதேபோல்
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே வாத்தியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சாத்தையா. இவர் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 8-வது வார்டு ஒன்றிய உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இவர் இன்று பதவியேற்றுவிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.தர்மர் உள்ளிட்ட சில அதிமுகவினர் கடத்திச் சென்றதாக அவரது மகன் ராஜா முதுகுளத்தூர் போலீஸில் புகார் அளித்தார். அதனையடுத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.