ETV Bharat / state

விடுப்பு கொடுக்க மறுத்ததால் பெண் காவலர் தற்கொலை முயற்சி!

author img

By

Published : Apr 26, 2019, 5:47 PM IST

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு விடுப்பு மறுக்கப்பட்டதால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விடுப்பு கொடுக்க மறுத்ததால் பெண் காவலர் தற்கொலை முயற்சி!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த வாரம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள், உடைமைகள் எல்லாம் தாக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் 800க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். தற்போது பொன்னமராவதியில் இயல்பு நிலை திரும்பி விட்டதால், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த காவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த நந்தினி(21) என்ற பெண் காவலர், பணி முடிந்த நிலையில் விடுப்பு கேட்டுள்ளார். இதற்கு பணி பதிவு செய்யும் எழுத்தர் விடுப்பு கொடுக்க முடியாது என்றும், மறுபடியும் பணி ஒதுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நந்தினி விஷம் குடிப்பேன் என பேசிய ஆடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டு பூச்சி மருந்தை குடித்துள்ளார். அவர் மயங்கியதை அறிந்து அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பணிச்சுமையை குறைக்க விடுப்பு கொடுக்காததால் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவலர்களிடையே மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது நண்பர்களுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..


Body:புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த வாரம் சமூகம் சார்ந்த இந்த பிரச்சனையில் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது அதனால் அங்கு சுமார் 800 போலீசார் குவிக்கப்பட்டனர். அதில் பெண் போலீசாரும் குவிக்கப்பட்டனர். தற்போது பொன்னமராவதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட போதிலும் மீண்டும் பிரச்சினை ஏதும் வராமல் இருக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வந்த போலீசார் அவரவர் ஊருக்கு சென்றுவிட்டனர் புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்படையில் இருக்கும் போலீசார்கள் தற்போது பொன்னமராவதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த நந்தினி(21) என்ற பெண் காவலர் பல நாட்களாக பணியில் இருந்து விட்டு பணி முடிந்த நிலையில் விடுப்பு கேட்டுள்ளார். பனி பதிவு செய்யும் எழுத்தர் அந்தப் பெண் காவலருக்கு விடுப்பு கொடுக்க முடியாது என்றும் மறுபடியும் பணி ஒதுக்க போவதாக சொன்னதால் ஆத்திரமடைந்த நந்தினி, ஆர்.ஐ அலுவலகம் முன்பு உள்ள கதவு கிட்ட போய் விஷம் குடிப்பேன் என்று 11 வினாடிகள் ஓடும் ஆடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டு பூச்சி மருந்தை குடித்து உள்ளார். அவர் மயங்கியதை அறிந்து அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அந்தப் பெண் காவலர் சிகிச்சையில் இருந்து வருகிறார் .பணிச்சுமையை குறைக்க விடுப்பு கொடுக்காததால் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காதலர்களிடையே மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.