ETV Bharat / state

அனைத்து சமுதாயத்திற்கும் ஒரே சுடுகாடுதான் இருக்க வேண்டும்: முருகன்

author img

By

Published : Sep 12, 2019, 7:45 PM IST

புதுக்கோட்டை: அனைத்து சமுதாயத்திற்கும் ஒரே சுடுகாடுதான் இருக்க வேண்டும் என்று தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.

L. Murugan

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி, தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எல். முருகன், "தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென டெல்லி, சென்னைவரை சென்று அலுவலர்களை சந்திப்பது மிகவும் கஷ்டமானது. அதனால் நேரடியாக பொது மக்களை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்து இதுவரை மாவட்டவாரியாக 250 மாவட்டங்களில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு

எஸ்டி பிரிவினருக்கான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். அதேபோல் நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும். வீடுகள் இல்லாதவர்களுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 5,900 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்வச் பாரத் மத்திய அரசு திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலுமே கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் பிரச்னை தமிழ்நாட்டை பொறுத்தவரை எல்லா மாவட்டங்களிலும் இருந்துவருகிறது. அனைத்து மாவட்ட துணை ஆட்சியருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது சாதி சான்றிதழ் கேட்டு பதிவு செய்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களை நடத்தி வழங்கப்படாமல் உள்ள சாதி சான்றிதழ் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கே வழங்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உயிரிழந்தவர்களை புதைப்பதற்காக அனைத்து சமூகத்திற்கும் ஒரே சுடுகாடுதான் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அவரவர் வசதிக்கேற்ப சாதி ரீதியாக சுடுகாடுகள் உள்ளன. இதனை அகற்றிவிட்டு அனைத்து சமுதாயத்திற்கும் ஒரே சுடுகாடுதான் இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

Intro:நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் வழக்கு விசாரணையை நிறுத்த வேண்டுமென அனிதாவின் குடும்பத்தை சேர்ந்தவர்களே ஆணையத்திற்கு கடிதம் அளித்துள்ளனர் - தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் பேட்டி,Body:



புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு பொதுமக்களுக்கு சென்றடைகிறது குறித்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் மத்திய அரசு
தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் தெரிவித்ததாவது,

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென டெல்லி மற்றும் சென்னை வரை சென்று அதிகாரிகள் சந்திப்பது மிகவும் கஷ்டமானது அதனால் நேரடியாக பொது மக்களை சந்திக்க வேண்டும் முடிவெடுத்து இதுவரையும் மாவட்டம் வாரியாக 250 மாவட்டங்களில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது எஸ்சி எஸ்டி மாணவர்கள் கான ரிசர்வேஷன் பிரைவேட் ஸ்கூல் மற்றும் அரசுபள்ளி இடங்கள் மற்றும் மத்திய அரசின் சுவச்பாரத் உள்ளிட்ட திட்டங்களில் பொதுமக்கள் எவ்வாறு பயன் அடைகிறார்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று உள்ளதா மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு திட்டங்களும் சென்று உள்ளதா என்பது குறித்து ஆலோசனை கூட்டமும் மற்றும் எஸ்டி பிரிவினர் கானா நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும் அதேபோல் நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும் வீடுகள் இல்லாதவர்களுக்கு இது வரைக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5900 வீடுகள் ஒதுக்கப் பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுவச் பாரத் மத்திய அரசு திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலுமே கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பிரச்சனை தமிழகத்தைப் பொருத்தவரை எல்லா மாவட்டங்களிலும் இருந்து வருகிறது எல்லாம் மாவட்ட துணை ஆட்சியர் இருக்கும் உத்தர விடப்பட்டுள்ளது அதாவது ஜாதி சான்றிதழ் கேட்டு பதிவு செய்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ஜாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது இதற்காக சிறப்பு முகாம்களை நடத்தி வழங்கப்படாமல் உள்ள ஜாதி சான்றிதழ் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கே வழங்க வேண்டும் அனைத்து மாநிலங்களிலும் இறந்தவர்களை புதைப்பதற்காக அனைத்து சமூகத்திற்கும் ஒரே சுடுகாடு தான் உள்ளது ஆனால் தமிழகத்தில் மட்டும் அவரவர் வசதிக்கேற்ப சாதிரீதியாக சுடுகாடுகள் உள்ளன இதனை அகற்றிவிட்டு அனைத்து சமுதாயத்திற்கும் ஒரே சுடுகாடு தான் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட உத்தரவிடப்பட்டுள்ளது
மாணவி அனிதாவின் வழக்கைப் பற்றி கேட்ட பொழுது
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் வழக்கு விசாரணையை நிறுத்த வேண்டுமென அனிதாவின் குடும்பத்தை சேர்ந்தவர்களே ஆணையத்திற்கு கடிதம் அளித்துள்ளனர் என்றும் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.