ETV Bharat / state

குடிநீர் தேவை பூர்த்தி செய்யயப்படும்- ஆட்சியர் உறுதி!

author img

By

Published : May 8, 2019, 11:30 PM IST

புதுக்கோட்டை: பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கியத்துவமளித்து பணியாற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கியத்துவம்- மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி!

குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியதாவது:

கோடை காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவையை கணக்கிட்டு சீரான குடிநீர் வழங்குவதற்காக புதிதாக மாற்று ஆழ் குழாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கியத்துவமளித்து பணியாற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Intro:புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கியத்துவமளித்து பணியாற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி உத்தரவு...

கோடை காலத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி தகவல்..


Body:குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது ,


கோடை காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்தை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளில் கடமை என்பதை அலுவலர்களுக்கு எடுத்துரைத்து ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவையை கணக்கிட்டு சீரான குடிநீர் வழங்கும் குடிநீர் தேவையை உள்ள இடங்களுக்கு புதிதாக மாற்று ஆழ் குழாய் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் காணப்படும் முறையற்ற குடிநீர் இணைப்புகள் விதிமுறைகளின்படி உடனடியாக அகற்றப்படும் இதுகுறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போதிய அளவு விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் 4 பேரூராட்சிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதியில் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை உடனுக்குடன் சரி செய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள மொத்தம் 42 வார்டுகள் அனைத்திலும் தினசரி குடிநீர் வினியோகம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதேபோன்று அறந்தாங்கி நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளிலும் தினசரி குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொடர்பான பணிகளை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.