ETV Bharat / state

கல்லூரியில் சுழற்சிமுறை வகுப்பை ரத்து செய்வதற்கு எதிராக போராட்டம்!

author img

By

Published : Jun 6, 2020, 1:21 AM IST

புதுக்கோட்டை: கல்லூரிகளில் சுழற்சி முறையிலான வகுப்புகளை ரத்து செய்வதற்கு எதிராக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

pudukkottai sfi protest against for cancelling 2 shifts in college
கல்லூரியில் சுழற்சிமுறை வகுப்பை ரத்து செய்வதற்கு எதிராக போராட்டம்!

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தற்போது கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுழற்சி வகுப்புகளை ரத்து செய்து முழுநேர வகுப்புகளாக எடுக்க போவதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறி, அதனை ரத்து செய்து வழக்கம்போல் சுழற்சி வகுப்புகளாக நடக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பள்ளி கட்டணம் வசூல் செய்யக்கூடாது எனவும் அப்படி வசூல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் 30-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் காவலர்கள் போராட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து மாணவர்கள் தங்களின் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்தனர்.

இதையும் படிங்க: மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதா: விவசாயிகள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.