ETV Bharat / state

ஏரிக்குள் எரிந்த எலும்பு துண்டுகள் மீட்பு: புதுக்கோட்டையில் பரபரப்பு

author img

By

Published : May 31, 2019, 8:43 AM IST

புதுக்கோட்டை: தினையாகுடி அருகே இருந்த ஏரிக்குள் எரிந்து கிடந்த எலும்பு துண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி அது மனிதனுடையதா என்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

எலும்பு துண்டுகள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த தினையாகுடியில் மஞ்சள்குளம் என்ற ஏரி உள்ளது. கோடைகாலம் என்பதால் வற்றிக் கிடக்கும் இந்த ஏரியின் உள்பகுதியில் இன்று சிலர் ஆடு மேய்க்க சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியின் ஒரு இடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் எலும்பு துண்டுகள், எரியாத சதைப்பிண்டங்கள், எலும்புகள் கிடந்தன. மேலும் எரியூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு கம்புகள் பாதி எரிந்த நிலையில் கிடந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வருவாய்த்துறை மற்றும் நாகுடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நாகுடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கிடந்த எலும்புதுண்டு உள்ளிட்டவற்றை சேகரித்தனர். எரிக்கப்பட்டு கிடந்தது விலங்கா அல்லது மனிதனுடையதா என்று காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏரிக்குள் கிடந்த எழும்புத்துண்டுகள்:  கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டதா என போலீசார் விசாரணை..

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஏரிக்குள் எரிந்த நிலையில் எலும்பு துண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மணமேல்குடியை அடுத்த தினையாகுடியில் மஞ்சள்குளம் என்ற ஏரி உள்ளது. கோடைகாலம் என்பதால் வற்றிக் கிடக்கும் இந்த ஏரியின் உள்பகுதியில் இன்று காலை சிலர் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது அப்பகுதியில் ஒரு இடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் எலும்பு துண்டுகள், எரியாத சதைப்பிண்டங்கள், எரியாத எலும்புகள் கிடந்தன. மேலும் எரியூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட 2 கம்புகள் பாதி எரிந்த நிலையில் கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து திருநெல்லிவயல் கடைவீதியில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் நாகுடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கிடந்த எலும்புதுண்டு உள்ளிட்டவற்றை சேகரித்தனர். எரிக்கப்பட்டு கிடந்தது விலங்கா அல்லது மனிதனா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.