ETV Bharat / state

தனி நபர் இடத்தில் உடல் அடக்கம் - தோண்டி எடுத்து இடுகாட்டில் தகனம்

author img

By

Published : Aug 28, 2019, 4:30 AM IST

புதுக்கோட்டை: தனி நபர் இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட முதியவர் உடலை தோண்டி எடுத்து, இடுகாட்டில் மீண்டும் அடக்கம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

police reburied a deadbody in cemetery!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள காத்தான்விடுதியைச் சேர்ந்த பிச்சையம்பதீஸ்வரர் என்ற முதியவர், கடந்த 8ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் நம்பன்பட்டி ரெங்கசாமி என்பவரின் மனைவி சுந்தரம்பாளுக்கு சொந்தமான பட்டா இடத்தில், அடக்கம் செய்யப்பட்டது. இதனால், சுந்தரம்பாள் ஆதரவாளர்கள் கடந்த 19ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கரம்பக்குடி தாசில்தாரிடம் புகாரும் அளித்தனர்.

இதையடுத்து, தனியாருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்யுமாறு பிச்சையம்பதீஸ்வரரின் உறவினர்களுக்கு தாசில்தார் சுற்றறிக்கை அனுப்பினார்.

ஆனால், அவ்விடத்தில் இருந்து சடலம் அகற்றப்படாததால் அப்பகுதிக்கு சென்ற தாசில்தார், காவல்துறையினரின் உதவியோடு பிச்சையின் உடலை எடுக்க முயன்றனர். அப்போது, பிச்சை உறவினர்களில் ஒருவர் தன் மீது பெட்ரோல் ஊற்ற முயற்சித்தார். பின்னர், காவல்துறைியனர் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, உடலை தோண்டி எடுத்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

in Pudukkottai, police reburied a deadbody in cemetery!

Intro:Body: பட்டா இடத்தில் புதைக்கப்பட்ட பிணம் தோண்டி எடுப்பு...


ஆலங்குடி அருகே காத்தான்விடுதியில் இறந்தவர் சடலத்தை நம்பன்பட்டியில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.அடக்கம் செய்ப்பட்ட இடத்தின் உரிமையாளர் சுந்தரம்பாள் எதிர்ப்பு தெரிவித்ததார் சடலம் தோண்டி எடுக்கபபட்டு இறந்தவருக்குரிய இடுகாட்டில் இன்று மீண்டும் உடல் நல்லடக்கம் செய்ய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள காத்தா ன்விடுதியை சேர்ந்த பிச்சை (எ) பிச்சையம்பதீஸ்வரர் ஆக - 8 - தேதி இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் நம்பன்பட்டி ரெங்கசாமி மனைவி சுந்தரம்பாளுக்கு சொந்தமான பட்டா இடத்தில் அவர்களின் எதிர்ப்பை மீறி அடக்கம் செய்தனர். அதனால் கடந்த ஆக- 19- தேதி நம்பன்பட்டி யைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் பட்டா இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றுமாறு சாலை மறியல் சமரசர கூட்டம், ஆகியவை நடைபெற்றன. பின்னர் கறம்பக்குடி தாசில்தார் ஜேம்ஸ் வில்லியம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிச்சை உறவினர்களிடம் கூறினார். ஜந்து நாட்களுக்குள் சடலத்தை அகற்றிவிட வேண்டுமென சுற்றறிக்கை (சம்மன் ) நோட்டீஸ் கொடுத்தனர்.
ஆனால் சம்மன்னில் குறிப்பிட்ட தேதியில் சடலத்தை அகற்றவில்லை.

இந்நிலையில் நேற்றுவரை சம்மந்தப்பட்டவர்கள் சடலத் தை அகற்றததால் கறம்பக்குடி தாசில்தார் ஜேம்ஸ் வில்லியம், மழையூர் வருவாய் ஆய்வாளர் சசிக்குமார் கிராம நிர்வாக அலுவலர்கள் உதயசூரியன், வட்டநில அளவையார் மகேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் ஆலங்குடி சரககாவல் துணைக் கண்காணிப்பாளார் முத்துராஜா,காவல் ஆய்வளா ர் அலாவுதீன், கீரமங்கலம் காவல் ஆய்வாளர் வைத்திய நாதன். ஆலங்குடி சரக சப் - இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், கீரமங்கலம் இராஜேந்திரன் , மழையூர் ரவி மாவட்ட தனிப் பிரிவு போலீஸ் முருகேசன், இராஜா,மற்றும் 200 போலீசாரின் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்ட பிச்சை (எ) பிச்சையம் பதீஸ்வரர் உடலை தோண்டி எடுத்து ஸ்ட்ர்ச்சரில் வைத்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள காத்தா ன்விடுதி மக்கள் பாரம்பரியம்மாக இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடுகாட்டில் அதிகாரிகள் அடக்கம் செய்தனர்.

பிணத்தை எடுத்து வெளியில் செல்லும்போது ஒருவர் பெட்ரோல் கேனுடன் தலையில் ஊற்றுவதற்கு முயற்சியில் ஈடுபட்டார்.போலீஸ் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் சற்று பரப்பரப்பு ஏற்ப்பட்டது. மேலும் காத்தான்விடுதி, மாங்கோட்டை, நம்பன்பட்டி, கும்மங்குளம். ஆகிய பொது மக்கள் நான்கு புறமும் சடலத்தை கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் தாசில்தார், டிஎஸ்பி, ஆகியோர் முயற்சியில் வேறு இடத்தில் சடலத்தை புதைத்தைனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.