ETV Bharat / state

இயற்கை விளைப்பொருட்கள் வாங்க புதுக்கோட்டையில் புதியதோர் முயற்சி!

author img

By

Published : Jun 11, 2019, 8:02 AM IST

புதுக்கோட்டை: உழவர்களிடமிருந்து பாரம்பரியமிக்க இயற்கை வேளாண் விளைப் பொருட்களை பொதுமக்கள் வாங்கிப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விற்பனை அரங்கு தொடங்கிவைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி

உழவர்களிடமிருந்து பாரம்பரியமிக்க இயற்கை வேளாண் விளைப் பொருட்களை பொதுமக்கள் வாங்கிப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உற்பத்திப் பொருட்கள் விற்பனை அரங்கினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியினை தொடங்கிவைத்து அவர் பேசுகையில்,

'புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயப் பொருட்கள் விற்பனை அரங்கு இன்று (ஜூன் 10) தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேம்படுத்திட மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிறுவனம் ஆயிரம் விவசாய உறுப்பினர்களைக் கொண்டு இயங்கிவருகிறது.

மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இயந்திரங்கள் கொள்முதல் செய்திட நிதி உதவி வழங்கப்பட்டுவருகிறது. இத்தகைய நிதி உதவி பெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் விளைபொருட்கள் விற்பனைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைபுரியும் பொதுமக்கள் தெரிந்துகொண்டு பயனடைய தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

இதில் பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானிய பயிறு, 102 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் நமது பாரம்பரியமிக்க இயற்கை வேளாண் விளைப் பொருட்களை வாங்கிப் பயன் அடைய வேண்டும்' என்று தெரிவித்தார்.

Intro:பொதுமக்கள் உள்ளவர்களிடமிருந்து பாரம்பரியமிக்க இயற்கை வேளாண் விளை பொருட்களை வாங்கி பயன் அடைய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகளின் பாரம்பரிய உற்பத்திப் பொருட்களான ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார்..


Body:இந்த நிகழ்ச்சியினை தொடக்கி வைத்து அவர் பேசியதாவது,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியரகத்தில் விவசாயிகளின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் சிறுதானியங்கள் மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்கள் அடங்கிய விற்பனை அரங்கினை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் செயல்படுத்தப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேம்படுத்திட மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பாக புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆயிரம் விவசாய உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இயந்திரங்கள் கொள்முதல் செய்திட நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது இத்தகைய நிதி உதவி பெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் விளைபொருட்கள் விற்பனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருகை புரியும் பொதுமக்கள் அதிகளவில் தெரிந்து கொண்டு பயனடைய இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இதில் பாரம்பரிய அரிசி வகைகள் மதிப்புகூட்டப்பட்ட சிறுதானிய பயிறு மற்றும் 102 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன பொதுமக்களிடம் இருந்து நமது பாரம்பரியம் மிக்க இயற்கை வேளாண் விளை பொருட்களை வாங்கி பயன் அடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.