ETV Bharat / state

'மக்கள் கைத்தறி ஆடைகளையே வாங்க வேண்டும்' - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்!

author img

By

Published : Sep 25, 2019, 8:19 AM IST

புதுக்கோட்டை : இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.1.25 கோடி கைத்தறி நெசவு ஆடைகளை விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இலக்கு நிர்ணயித்து உள்ளார். மேலும், பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி

புதுக்கோட்டை கைத்தறி நெசவு ஆடைகளைக் கொண்ட முக்கனி கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி துவங்கி வைத்தார்.

பின் இதுகுறித்துப் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி; 'தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 84 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.

மாவட்ட ஆகடையை பார்வையிட்ட  மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரிட்சியர் உமாமகேஸ்வரி
துணிகளைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெரும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு வழங்கும் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், 'கனவு நனவு திட்டம்' என்ற சேமிப்புத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெற்று, 12ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது.

புதுக்கோட்டை முக்கனி விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது ரூ.90.19 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.1.25 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் தங்களுக்குத் தேவையான துணிகள் வாங்கி நெசவாளர் முன்னேற்றத்திற்கு துணை புரிய வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க : அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை: நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை

Intro:இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ,1.25 கோடி கைத்தறி நெசவு ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு..
பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்க்கைக்கு விளக்கேற்ற வேண்டும்..

கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி பேட்டி..Body: புதுக்கோட்டை கைத்தறி நெசவு ஆடைகளைக் கொண்ட முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 84 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது. காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெரும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30மூ தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள் காஞ்சிபுரம் ஆரணி தஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள் கூறைநாடு புடவைகள் திருபுவனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள்இ போர்வைகள்இ படுக்கை விரிப்புகள்இ ஆயத்த ஆடைகள் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், ‘கனவு நனவு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30மூ அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி 2018ல் தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள 16 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.11.34 கோடி விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி 2019க்கு ரூ.13 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை முக்கனி விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.90.19 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.1.25 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கோஆப்டெக்ஸில் தங்களுக்கு தேவையான துணிகள் வாங்கி நெசவாளர் முன்னேற்றத்திற்கு துணை புரிய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
Conclusion:Visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.