ETV Bharat / state

"கள்ளக் கூட்டணி வைப்பதில் திமுகவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்" - கடம்பூர் ராஜூ காட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 10:52 PM IST

Updated : Nov 4, 2023, 11:11 AM IST

திமுக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு
திமுக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு

AIADMK Ex Minister Kadambur Raju: கள்ளத் தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றும் கள்ள உறவு என்பது திமுகவுக்கு கை வந்த கலை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

புதுக்கோட்டை: திமுக அமைச்சர் ஏவ.வேலு வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து தொலைக்காட்சி பார்த்துத் தான் தெரிந்து கொண்டதாகவும், கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் எனவும் புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (நவ.03) முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கடம்பூர் ராஜு, “தமிழக அரசின் பொது நிறுவனங்கள் குழு சார்பில், பல்வேறு பகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (நவ.02) திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, இன்று புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணிமனை, அரசு மாணவியர் விடுதி, ஆவின் பால் நிலையம், சிப்காட் தொழிற்பேட்டை, சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடைபெற உள்ளது. திமுக அமைச்சர் ஏவ.வேலு வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து தொலைக்காட்சி பார்த்துத் தான் நாங்கள் தெரிந்து கொண்டோம்” என்றார்.

அதையடுத்து அதிமுக கள்ள கூட்டணி வைத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை குறித்த கேள்விக்கு, “கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம். திமுகவின் குணமே அதுதான். கள்ள உறவு என்பது திமுகவுக்கு கை வந்த கலை.

சசிகலா விவகாரத்தில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்று பார்ப்போம். நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்துமே எங்களுக்குச் சாதகமாகத் தான் இருக்கும். பாஜக கூட்டணி விவகாரத்தில் அதிமுக உறுதியாக உள்ளது. இது குறித்து ஏற்கனவே பொதுச் செயலாளர் தெளிவுபடுத்தி விட்டார்.

அதேபோன்று, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள், திமுக ஆட்சியில் தற்போது திறந்து வைக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை” என்று கூறினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், “ திருச்சியில் உள்ள காகித தொழிற்சாலை, அதிமுக ஆட்சிக் காலத்தில் 22 மாதங்களில் தொடங்கப்பட்ட திட்டம். அந்த திட்டம் தான் இன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு என்று சி.எஸ்.ஆர் நிதி உள்ளது. இது தற்போது கரூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டு உள்ளது. இதனை பிரித்து திருச்சி மாவட்டத்திற்கு என்று விதியை ஒதுக்கி செயல்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு:மின் கம்பத்தை சரிசெய்யும் பணியின் போது மின்சாரம் தாக்கி கேங்கேன் பலி; மின்சார ஊழியர் கைது!

Last Updated :Nov 4, 2023, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.