ETV Bharat / state

கிருஷ்ண ஜெயந்தி விழா.. புதுக்கோட்டையை புத்துணர்ச்சியாக்கிய குழந்தைகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 2:39 PM IST

Krishna Janmashtami: புதுக்கோட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணன் மற்றும் ராதை வேடங்கள் அணிந்து ஏராளமான குழந்தைகள் சாமி தரிசனம் செய்தனர்.

occasion of Krishna Jayanti
கிருஷ்ண ஜெயந்தி விழா புதுக்கோட்டையை புத்துணர்ச்சியாக்கிய குழந்தைகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா புதுக்கோட்டையை புத்துணர்ச்சியாக்கிய குழந்தைகள்

புதுக்கோட்டை: கிருஷ்ணனைப் பூஜிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும், கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணன் பக்தர்களின் இல்லத்திற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக இந்து மதத்தினர் நம்புகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வெண்ணெய், அவுள், தயிர், பால், பழங்கள் உள்ளிட்ட கிருஷ்ணனுக்குப் பிடித்த பலகாரங்களை வைத்து, நைவேத்தியம் செய்து வழிபடுவர். அதன்படி நேற்று (செப்.6) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதன் வெளிப்பாடாகத் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

பல்வேறு கோவில்களில் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பெற்றோர்கள் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வருடம் தோறும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா வெகு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

குறிப்பாகப் புதுக்கோட்டை, பல்லவன் குளம் அருகே உள்ள ஸ்ரீ ரகுமாயி ஸமேத ஸ்ரீ விட்டோபா பெருமாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாகக் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறும். அந்த வகையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏராளமான குழந்தைகளுக்குக் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடம் அணிவித்து, பெற்றோர்கள் கோவிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஒரு வயது கைக்குழந்தைகள் முதல் 15 வயது சிறுவர், சிறுமிகள் வரை அனைவரும் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடங்களை அணிந்து பெற்றோர்களுடன் கோவிலுக்கு வந்தது அனைவரிடத்திலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் குழந்தைகள் ஒருவருக்கொருவர் தாங்கள் அணிந்துள்ள வேடங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் கிருஷ்ணன் வேடம் அணிந்து, கையில் புல்லாங்குழலை வைத்திருந்த சிறு குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் கையில் ஏந்தி வரிசையாகக் கோயிலுக்கு வந்ததைப் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மேலும் கோயிலுக்கு வந்த ஒரு சில தாய்மார்கள் பிறந்து ஒரு வருடமான கைக்குழந்தைக்குக் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடங்களை அணிந்து கோவிலுக்கு அழைத்து வந்தனர். இந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோயிலைச் சுற்றி மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு, ரம்மியமாகக் காட்சி அளித்தது.

இது மட்டுமின்றி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேலத்தில் தொடங்கியது அரசுப் பொருட்காட்சி.. கண்கவர் மினியேச்சர் கால்நடைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.