ETV Bharat / state

புதுக்கோட்டையில் 1537 வாக்குச் சாவடி மையங்கள்

author img

By

Published : Apr 17, 2019, 11:50 PM IST

புதுக்கோட்டை: ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்க 1537 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

pudukottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு வருகின்றனர். வாக்குச் சாவடியில் பணிபுரிவதற்கான பயிற்சிகள் அனைத்தும் கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதற்கான பயிற்சிகள் இன்று நிறைவடைந்த நிலையில் நாளை தேர்தலுக்கு ஆசிரியர்கள் தயாராக இருக்கின்றனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது:

புதுக்கோட்டையில் 1537 வாக்குச் சாவடி மையங்கள்

மக்களவை பொதுத்தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1537 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு மூன்று கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வாக்குப்பதிவு மையத்தில் போதுமான அளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.


Intro:புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை தேர்தலை முன்னிட்டு மொத்தம் 1537 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது...


Body:நாளை பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு வருகின்றனர் வாக்குச் சாவடியில் பணிபுரிவதற்கான பயிற்சிகள் அனைத்தும் கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் நாளை தேர்தலுக்கு ஆசிரியர்கள் தயாராக இருக்கின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது,.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1537 அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு மூன்று கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி மின் விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வாக்குப் பதிவு மையத்தில் போதுமான அளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்று கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.