ETV Bharat / state

மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி!

author img

By

Published : Jan 4, 2020, 9:05 PM IST

பெரம்பலூர்: மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Two peoples Trying to Fire
Two peoples Trying to Fire

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் ஒன்றியம் , கீழப்புலியூர் ஊராட்சி 5ஆவது வார்டு உறுப்பினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெள்ளைச்சாமி என்பவர் தோல்வியுற்றார். இதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையின் அறிவிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வேப்பூர் யூனியன் அலுவலகத்தில் ஐந்தாவது வார்டின் வெற்றி குறித்து அறிவிப்பு இன்று வெளியிட இருந்தது. இதனையறிந்த வேட்பாளர் வெள்ளைச்சாமி தனது ஆதரவாளர்களுடன் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறுவாக்குஎண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால் தேர்தல் அலுவலர்கள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் வெள்ளைச்சாமியின் ஆதரவாளர்கள் சுரேஷ், பிரவீன் ஆகிய இருவர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில், காவல் துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர் வெங்கடேஸ்வரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி இருவர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

இதையும் படிங்க: களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!

Intro:


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, வேப்பூர் ஒன்றியம் , கீழப்புலியூர் ஊராட்சி
5வது வார்டு உறுப்பினர் தேர்தல் எண்ணிக்கையின் போது ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெள்ளைச்சாமி என்பவர் தோல்வியுற்றார். மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தீக்குளிக்க முயற்சி
Body:


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, வேப்பூர் ஒன்றியம் , கீழப்புலியூர் ஊராட்சி
5வது வார்டு உறுப்பினர் தேர்தல் எண்ணிக்கையின் போது ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெள்ளைச்சாமி என்பவர் தோல்வியுற்றார்.

இதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையின் இதுகுறித்த அறிவிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வேப்பூர் யூனியன் அலுவலகத்தில் ஐந்தாவது வார்டின் வெற்றி குறித்து அறிவிப்பு இன்று வெளியிட இருந்தது.

இதனையறிந்த வேட்பாளர் வெள்ளைச்சாமி தனது ஆதரவாளர்களுடன் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறுவாக்குஎண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் வெள்ளைச்சாமியின் ஆதரவாளர்கள் சுரேஷ், பிரவீன் ஆகிய இருவர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது .

இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேஸ்வரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.Conclusion:இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.