ETV Bharat / state

வாடிக்கையாளர்களுக்கு விதைப்பந்து வழங்கிவரும் கொத்துக்கறி உணவகம்!

author img

By

Published : Jan 31, 2020, 11:40 AM IST

பெரம்பலூர்: பாலக்கரைப் பகுதியருகே உள்ள கொத்துக்கறி உணவகம், உணவகத்திற்கு உணவு உண்ண வருபவர்களுக்கு மரங்கள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் இலவசமாக விதைப்பந்துகளை வழங்கி அசத்திவருகிறது.

vithaipannthu hotel story script visuval  விதைப்பந்து வழங்கும் உணவு விடுதி  பெரம்பலூரில் விதைப்பந்து வழங்கும் உணவு விடுதி  கொத்துக் கறி ஹோட்டல்  perambalur kothu kari hotel  perambalur kothu kari hotel provite seed ball to customers
விதைப்பந்துகள் வழங்கிவரும் கொத்துக்கறி உணவகம்

பெரம்பலூர் பாலக்கரை பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் கொத்துக்கறி என்னும் உணவகம் உள்ளது. புதியதாக திறக்கப்பட்டுள்ள இவ்வுணவகம் கலைநயத்துடனும் அழகுடனும் வாடிக்கையாளரைக் கவரும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் வாடிக்கையாளரை கவருவதற்கு பல்வேறு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிலொன்று உணவு உண்ண வருவபவர்களுக்கு விதைப்பந்து வழங்குவது.

மக்களிடைய மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில், வேம்பு, புங்கன், கொன்றை உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகளை விதைப்பந்துகளாக ஆறு விதைப்பந்துகள் அடங்கிய பெட்டியை மகிழ்ச்சியுடன் வழங்குகின்றனர். விதைப்பந்துகள் குறித்த தெரியாதவர்களுக்கு அங்குள்ள பணியாளர்கள் விதைப்பந்துகள் குறித்து விளக்கம் கொடுக்கின்றனர்.

விதைப்பந்துகள் வழங்கிவரும் கொத்துக்கறி உணவகம்

உணவகத்தின் இந்த முயற்சி வாடிக்கையாளரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும், விதைப்பந்துகள் வழங்கிவரும் உணவகத்தின் உரிமையாளரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: கால்களால் வாழ்க்'கை'யை வென்ற மாற்றுத்திறனாளி

Intro: பெரம்பலூரில் சாப்பிட வருபவர்களுக்கு விதைப்பந்து வழங்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தும் உணவகம்.
Body:விவசாயத்தினை மேம்படுத்துவதற்காகவும், ஊக்குவிக்கும் நோக்கில் பெரம்பலூரில் விதைப்பந்துகளை இலவசமாக வழங்கி அசத்தி வருகின்றது. ஒரு உணவகம்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ளது இந்த உணவகம் - "கொத்துக் கறி அசைவ உணவகம்
பெயரே சற்று வித்தியாசமாக உள்ளது.
இந்த உணவகம் முழுவதும் கலைநயத்துடன் அழகுடன் பார்ப்பதற்கு பச்சை பசேலன்று இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது இந்த உணவகம். வாடிக்கையாளர் களை கவர்வதற்கு இந்த உணவக உரிமையாளர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார்.
அசைவ உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் கவரும் வன்ணம் செய்து தருகின்றனர்.
குறிப்பாக விவசாயத்தை மேம்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாய தொழில் செழிப்புற இங்கு சாப்பிட வருபவர்களுக்கு " வித்தியாசமான முயற்சிகளாக
" விதைப்பந்துகளை வழங்கி வருகின்றனர்.
வேம்பு, புங்கன், கொன்றை உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகளை விதைப்பந்துகளாக ஒரு பெட்டியில் - 6விதைப்பந்துகள் அடங்கிய ஒரு பெட்டியை மகிழ்ச்சியுடன் வழங்குகின்றனர்.
மேலும் விதைப் பந்துகள் பற்றி தெரியாதவர்களுக்கு அங்குள்ள பணியாளர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்Conclusion:மற்ற எந்த உணவகத்திலும் இது போன்று முயற்சிகள் இல்லை யென் றாலும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், விவசாய பணிகளை ஊக்கு விக்க விதைப் பந்துகள் கொடுக்கும் இந்த உணவகத்தை பொதுமக்கள் பாராட்டி செல்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.