ETV Bharat / state

பெரம்பலூர்: அதிமுக, திமுக உள்ளிட்ட 19 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

author img

By

Published : Mar 27, 2019, 11:14 PM IST

பெரம்பலூர்: நாடாளுமன்ற தொகுதி வேட்பு மனு பரிசீலனையில் 32 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் 19 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சாந்தா தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் மற்றும் அதிமுக வேட்பாளர் சிவபதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் உள்ளிட 32 பேரின் வேட்புமனுக்களில் 19 மனுக்கள் ஏற்கப்பட்டு, 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

Intro:பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பு மனு பரிசீலனையில் 32 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் 19 பேர் மனுக்கள் மட்டும் ஏற்பு 13 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி


Body:தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்புமனு பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியர் சாந்தா தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது


Conclusion:பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் மற்றும் அதிமுக வேட்பாளர் சிவபதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்பு மொத்தம் 32 வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் 19 பேர் மனுக்கள் ஏற்பு 13 பேரின் மனுக்கள் தள்ளுபடி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.