ETV Bharat / state

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று

author img

By

Published : Jan 20, 2022, 8:39 AM IST

Updated : Jan 20, 2022, 9:50 AM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, அலுவலகப் பணியாளர்களுக்கு கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று

பெரம்பலூர்: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் தற்போது அதிகரித்துவருகிறது. தினசரி கரோனா பாதிப்பு என்பது 27 ஆயிரத்தை கடந்த நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தொற்று பாதிப்பு காரணமாகத் திட்ட இயக்குநர் அலுவலகம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாக்கு கரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவுக்கு கரோனா தொற்று

இதனிடையே நேற்று (ஜனவரி 19) மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் தொற்றுப் பரவல் பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் மிக வேகமாக அதிகரித்துவருவதால் தடுப்பு நடவடிக்கையாக ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர்கள் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அங்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Last Updated :Jan 20, 2022, 9:50 AM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.