ETV Bharat / state

பெரம்பலூரில் ஆடு மேய்த்த விவசாயி மின்னல் தாக்கி பலி!

author img

By

Published : Apr 27, 2023, 1:46 PM IST

பெரம்பலூரில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

farmer grazing goats in Perambalur was struck by lightning and killed
பெரம்பலூரில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி பலியானார்

பெரம்பலூர்: ஆலத்தூர் வட்டம், சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாய வேலை செய்து வரும் இவர் நேற்று காலை தனக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காகக் கூட்டிச் சென்றுள்ளார்.மாலை சுமார் 4.30 மணி அளவில் ஆடுகளை மீண்டும் வீட்டுக்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் லேசான மழை பெய்து கொண்டிருந்தது.

அய்யன் குட்டை என்ற இடத்தில் முருகேசன் சென்று கொண்டிருந்த போது பலத்த மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த முருகேசன் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சாத்தனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அறிந்து அங்கு வந்த முருகேசனின் உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்த தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி.. கொலை செய்து ஏரியில் வீசிய கொடூர காதலன்.. காஞ்சி பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.